தான் இறந்து விட்டதாக போஸ்டர் - நடிகர் சித்தார்த்தின் ரியாக்‌ஷனை பாருங்க

சித்தார்த்

சிலர் சித்தார்த், இறந்து விட்டதாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்தனர்.

 • Share this:
  தான் இறந்து விட்டதாக வெளியான போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் நடிகர் சித்தார்த்.

  இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், தொடர்ந்து அரசியல் ரீதியான கருத்துக்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் ஆளாவார்.

  இதற்கிடையே சிலர் சித்தார்த், இறந்து விட்டதாகக் கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்தனர். இதையடுத்து அந்த போஸ்டரை வெளியிட்டவரின் பெயரோடு கூடிய ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்த சித்தார்த், ”குறிப்பிட்டவர்களின் வெறுப்பு மற்றும் துன்புறுத்தல், இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  அதே நேரத்தில் பிக் பாஸ் 13 வெற்றியாளர் சித்தார்த் சுக்லா நேற்று மாரடைப்பால் காலமானார். அதனால் குழப்பத்தில் தமிழ் நடிகர் சித்தார்தின் படத்தைப் பதிவிட்டிருக்கலாம் எனவும் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: