Siddharth: 'பொய் சொன்னால் அறைவிழும்’ - உ.பி. முதல்வரை சாடிய சித்தார்த்

Siddharth: 'பொய் சொன்னால் அறைவிழும்’ - உ.பி. முதல்வரை சாடிய சித்தார்த்

யோகி - சித்தார்த்

மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் நிலைமை கை மீறி போயுள்ளது.

  • Share this:
    மத்திய மோடி அரசின் செயல்பாடுகளை அடிக்கடி கண்டித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் நடிகர் சித்தார்த். மோடியையே படம் போட்டு பாகம் குறிக்கும் சித்தார்த்தின் சமீபத்திய தாக்குதலுக்கு, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆளாகியுள்ளார்.

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இந்தியா முழுவதும் அவதிப்படுகின்றனர். பல மரணங்கள் நிழந்துள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆக்சிஜன் அனுப்புங்கள் என்று வணங்கி கேட்கிறார். முன்னணி மருத்துவமனைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை என அலறுகின்றன. மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் நிலைமை கைமீறி போயுள்ளது.

    உண்மை இவ்வாறிருக்க, உபியில் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை, அப்படி யாராவது செய்தி பரப்பினால் அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்தார் யோகி ஆதித்யநாத். ஆமாம், உபியில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கு. இதை நான் சொல்கிறேன். முடிந்தால் வழக்குப் போட்டு என் சொத்துக்களை பறிமுதல் செய்து பாருங்கள் என்று பதிலடி தந்தார் ப்ரியங்கா காந்தி.



    ஆக்சிஜன் போர் இன்னும் முடியவில்லை. மருத்துவமனைகள் ஏதாவது ஆக்சிஜன் பற்றாக்குறை என்று தவறான கோரிக்கையை முன்வைத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் எச்சரித்துள்ளார் யோகி ஆதித்யநாத். இதற்கு பதிலடி கொடுக்கும்வகையில், பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ இல்லை தலைவரோ யாராக இருந்தாலும் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சித்தார்த்.

    சித்தார்த்தின் இந்த எதிர்வினையை பாராட்டியும், சிலர் விமர்சித்தும் எழுதி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: