முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாய்னா நேவாலை கொச்சைப்படுத்திய சித்தார்த்? வலுக்கும் கண்டனங்கள்

சாய்னா நேவாலை கொச்சைப்படுத்திய சித்தார்த்? வலுக்கும் கண்டனங்கள்

சாய்னா - சித்தார்த்

சாய்னா - சித்தார்த்

சித்தார்த்தின் இந்த ட்வீட் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழத் தொடங்கின.

  • Last Updated :

பிரபல பேட்மிண்டன் பிளேயர் சாய்னா நேவால் ட்வீட்டுக்கு நடிகர் சித்தார்த் அளித்த பதில் தற்போது சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதியிலேயே திரும்பினார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையா என பலர் தங்கள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரபல பேட்மிண்டன் பிளேயர் சாய்னா நேவால், 'எனது சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. அராஜகவாதிகளால் பிரதமர் மோடி மீது கோழைத்தனமான தாக்குதலை ஏற்படுத்தியதற்கு வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று கண்டனம் தெரிவித்தார்.

சாய்னாவின் அந்த ட்வீட்டுக்கு, “உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்... கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா” என்று பதிலளித்திருந்தார் நடிகர் சித்தார்த்.

சித்தார்த்தின் இந்த ட்வீட் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் எழத் தொடங்கின. இதையடுத்து தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதிய கடிதத்தில், விளையாட்டு வீராங்கணை சாய்னா நேவாலுக்கு, ஆட்சேபிக்கத்தக்க வகையில், பெண்களை அவமானபடுத்தும் வகையில் வெறுப்பு ட்வீட் செய்ததற்காக நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்ந்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ’சேவல் மற்றும் காளை. அதுதான் குறிப்பு. மற்றபடி வாசிப்பது நியாயமற்றது. அவமரியாதைக்குரிய எதுவும் நோக்கமாக இல்லை, சொல்லப்படவில்லை அல்லது தூண்டப்படவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார் சித்தார்த்.

இதையும் படிங்க - நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?

மிஸ் பண்ணிடாதீங்க - ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

சர்ச்சைகளில் சிக்குவது அவருக்கொன்றும் புதிதல்ல. குறிப்பாக ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை ட்விட்டரில் தெரிவிக்கும் சித்தார்த், தற்போதும் அப்படித்தான் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Actor Siddharth