ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘இதயத்தின் இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்து’ – அதிதி ராவுக்காக உருகும் சித்தார்த்…

‘இதயத்தின் இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்து’ – அதிதி ராவுக்காக உருகும் சித்தார்த்…

சித்தார்த் - அதிதி ராவ்

சித்தார்த் - அதிதி ராவ்

சித்தார்த்தும், அதிதியும் மகா சமுத்ரம் படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இதயத்தின் இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்து என்று நடிகை அதிதிராவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் நடிகர் சித்தார்த்.

  மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் அதிதி ராவ் ஹைதாரி. அடுத்ததாக செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் இவர் சின்ன ரோலில் நடித்திருந்தார்.

  இவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக சினிமா உலகில் பேசப்படுகிறது. தற்போதும் கூட இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும், தங்களுக்கு இடையிலான உறவு குறித்து இருவரும் வெளிப்படையாக ஏதும் அறிவிக்கவில்லை.

  பாடல் வெளியீட்டு விழா மேடையில் பதற்றம்… தடுமாற்றத்துடன் பேசிய ஹீரோ அஸ்வின்…

  இந்நிலையில் 36வது பிறந்த நாளை கொண்டாடும் அதிதி ராவ் ஹைதாரிக்கு சித்தார்த் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இதயத்தின் இளவரசிக்கு ஹேப்பி ஹேப்பி பர்த் டே. உனது பெரிய, சிறிய, இன்னும் காணாத கனவுகளும் நிறைவேறுவதற்கு பிரார்த்திக்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Siddharth (@worldofsiddharth)  சித்தார்த்தும், அதிதியும் மகா சமுத்ரம் படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டேட்டிங், காதல் குறித்துவரும் தகவல்களுக்கு இருவரும் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

  அதிதி கடைசியாக ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது அவர் விஜய் சேதுபதியுடன் காந்தி டாக்கீஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood