”பாக்ஸர் அங்கிள் நீங்க ஒண்ணும்...” ஜெயக்குமாருக்கு நடிகர் சித்தார்த் பதில்

”பாக்ஸர் அங்கிள் நீங்க ஒண்ணும்...” ஜெயக்குமாருக்கு நடிகர் சித்தார்த் பதில்
அமைச்சர் ஜெயக்குமார் | நடிகர் சித்தார்த்
  • Share this:
தன்னை யார் என்று கேட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு சித்தார்த் பதிலளித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளம் தொடங்கி, பல்வேறு சமூக பிரச்னைகளில் தன்னுடைய கருத்தை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருபவர் நடிகர் சித்தார்த். அவ்வப்போது மத்திய, மாநில அரசுகளின் தவறான முடிவுகளையும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை.

அந்த வகையில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது குறித்து ட்வீட் செய்திருந்த சித்தார்த், “என்னுடைய மாநிலத்துக்கும் என்னுடை மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பிரதிநிதியாக இருப்பதற்கு நான் மிகவும் அவமானப்படுகிறேன். குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அவரின் உண்மையான நிறம், அவருடைய நேர்மையின் அளவு, எந்த விலை கொடுத்தாவது ஆட்சியைத் தக்கவைக்கவேண்டும் எண்ணம் தெரியவந்துள்ளது.


உங்களுடைய தற்காலிக அதிகாரத்தை ரசித்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதா ஒருபோதும் குடியுரிமைச் சட்டத்தை ஆதரிக்கமாட்டார். அவர் இல்லாதபோதும் அவருடைய பண்பாட்டை எப்படி அ.தி.மு.க அழிக்கிறது” என்று கூறியிருந்தார்.

மேலும் படிக்க: படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு - நடிப்பை நிறுத்திய நடிகை!

சித்தார்த்தின் கருத்தை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வியாக முன்வைத்தனர் செய்தியாளர்கள், அதற்கு பதிலளித்த அமைச்சர், சித்தார்த் யார் எந்தப் படத்தில் நடித்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். அதை வீடியோவாக பதிவிட்டு சித்தார்த்துக்கு டேக் செய்ய தன்னை யார் என்று கேட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு சித்தார்த் பதிலளித்துள்ளார்.அதில்,  “என்னை யார் என்று அவர் கேட்டுள்ளார். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. அவருடைய அரசு 2014-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் என்று விருது வழங்கியுள்ளனர்.  2017-ம் ஆண்டு அறிவித்த விருது  இன்னும் எனக்கு வழங்கப்படவில்லை. நான் விளம்பரத்துக்காக எதையும் பேசவேண்டிய தேவையில்லை. நேர்மையாக உழைத்து எனக்கான இடத்தை நான் சம்பாதித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.மேலும் தனது அடுத்த ட்வீட்டில் தொடர்ந்திருக்கும் சித்தார்த்,  “நாட்டு பிரச்னை குறித்து கவலை தெரிவிக்கும், வரி செலுத்தும் குடிமகன்களை அவமானப்படுத்துவதன் மூலமே நீங்கள் இந்த இடத்தை அடைந்துள்ளீர்கள் பாக்ஸர் அங்கிள். நீங்க ஒண்ணும் என்னை பெரிய ஆளாக்க தேவையில்லை. உங்கள் வேலையைப் பார்க்கவும். அது போதும். விரைவில் நலம் பெறவும்” என்றும் தெரிவித்துள்ளார்.

படிக்க: ரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்!
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்