ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரிலேஷன்ஷிப்பில் அடுத்த கட்டத்திற்கு நகரும் சித்தார்த் – அதிதி ராவுடன் வெளிநாடு ட்ரிப்

ரிலேஷன்ஷிப்பில் அடுத்த கட்டத்திற்கு நகரும் சித்தார்த் – அதிதி ராவுடன் வெளிநாடு ட்ரிப்

சித்தார்த் - அதிதி ராவ்

சித்தார்த் - அதிதி ராவ்

சித்தார்த்தும், அதிதியும் மகா சமுத்ரம் படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் சித்தார்த் –  நடிகை அதிதி ராவ் இடையே அதிக நெருக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இருவரும், ரிலேஷன்ஷிப்பில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார்கள். இதுபற்றிய தகவல் திரையுலகில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

  மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் அதிதி ராவ் ஹைதாரி. அடுத்ததாக செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் இவர் சின்ன ரோலில் நடித்திருந்தார்.

  இவருக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக சினிமா உலகில் பேசப்படுகிறது. தற்போதும் கூட இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும், தங்களுக்கு இடையிலான உறவு குறித்து இருவரும் வெளிப்படையாக ஏதும் அறிவிக்கவில்லை.

  பிளாஸ்டிக் சர்ஜரியா? ஆளே மாறிப்போன கத்ரீனா கைஃப்.. ஷாக்கான ரசிகர்கள்!

  36வது பிறந்த நாளை கொண்டாடிய அதிதி ராவ் ஹைதாரிக்கு வாழ்த்துக் கூறியிருந்த சித்தார்த், ‘இதயத்தின் இளவரசிக்கு ஹேப்பி ஹேப்பி பர்த் டே. உனது பெரிய, சிறிய, இன்னும் காணாத கனவுகளும் நிறைவேறுவதற்கு பிரார்த்திக்கிறேன்.’ என்று உருகியிருந்தார்.

  மும்பை விமான நிலையத்திற்கு வரும் அதிதி ராவ்.

  இந்நிலையில் தங்களது ரிலேஷன்ஷிப்பில் அடுத்த கட்ட நகர்வாக இருவரும் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்கின்றனர். இதுதொடர்பாக இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு நேற்று வந்துள்ளனர். கேஷுவலாக வந்த இருவரும் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு ஃப்ளைட் ஏறிச்சென்றுள்ளார்கள். எந்த நாட்டிற்கு இருவரும் சென்றார்கள் என்ற விபரம் தெரியவரவில்லை. அடுத்ததாக நட்சத்திர ஜோடியை சினிமா உலகம் வரவேற்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

  திருப்பதி கோயிலுக்கு விசிட் அடித்த நமீதா! ரசிகர்களுடன் செல்ஃபி!

  சித்தார்த்தும், அதிதியும் மகா சமுத்ரம் படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டேட்டிங், காதல் குறித்துவரும் தகவல்களுக்கு இருவரும் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

  அதிதி கடைசியாக ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது அவர் விஜய் சேதுபதியுடன் காந்தி டாக்கீஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Siddharth, Actress Aditi Rao Hydari, Kollywood