ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது விபரீதம்… மாரடைப்பு ஏற்பட்டு பிரபல நடிகர் மரணம்

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது விபரீதம்… மாரடைப்பு ஏற்பட்டு பிரபல நடிகர் மரணம்

நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி

நடிகர் சித்தாந்த் சூர்யவன்ஷி

டெல்லியை சேர்ந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த சூப்பர் மாடல் அழகியான அலேஷியா ராவத்தை காதலித்து திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பிரபல நடிகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இந்தி சின்னத்திரையில் பிரபல நடிகராக இருப்பவர் சித்தாந்த் சூர்யவன்ஷி. 46 வயதாகும் இவர் கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

  20-க்கும் அதிகமான மெகா சீரியர்கள், டிவி நிகழ்ச்சிகளில் இடம்பெற்று இந்தி சின்னத்திரை வட்டாரத்தில் நன்கு அறியப்படும் நபராக சித்தாந்த் உள்ளார். டெல்லியை சேர்ந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த சூப்பர் மாடல் அழகியான அலேஷியா ராவத்தை காதலித்து திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

  உடற்பயிற்சி செய்வதில் சித்தாந்த் சூர்யவன்ஷிக்கு ஆர்வம் அதிகம் உண்டு. அந்த வகையில் தினமும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்தார்.

  Ajith: உங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது... ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

  இந்நிலையில், இன்று அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சுருண்டு விழுந்த அவரை  அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சித்தாந்தை காப்பாற்ற மருத்துவர்கள் போராடிய முயற்சி தோல்வியில் முடிந்து அவர் உயிரிழந்தார்.  இந்த சம்பவம் இந்தி சின்னத்திரையுலகில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. சித்தாந்தின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் என்பது போன்ற சில செய்திகள் கடந்த சில மாதங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

  தமிழ்நாட்டில் மட்டும் 100-க்கும் அதிகமான திரையரங்குகள்… வெற்றி நடைபோடும் காந்தாரா…

  சித்தாந்தை போல கன்னட திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்த புனீத் ராஜ் குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம்தேதி, ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: TV Serial