Sibi Raj: ’இதை நம்பாதீங்க, சுத்த பொய்’ பதறியடித்த சிபிராஜ்

Sibi Raj: ’இதை நம்பாதீங்க, சுத்த பொய்’ பதறியடித்த சிபிராஜ்

சிபிராஜ்

நட்சத்திரங்களின் பெயரில் பேஸ்புக், ட்விட்டரில் போலி அக்கவுண்ட் தொடங்குவது, அவர்கள் பெயரில் கமெண்ட்கள் வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களை சந்திக்கு இழுப்பது சிலரது பொழுதுப்போக்கு. நடிகர் சிபி ராஜ் அப்படியான புதுவித மோசடி ஒன்றில் சிக்கியிருக்கிறார்.

  • Share this:

    சிபி ராஜ் நடிக்கும் படத்துக்கு ஹீரோயின் மற்றும் நடிகர்கள் தேவை என்று அவரது படத்தைப் போட்டு ஒரு விளம்பரம் நேற்றிலிருந்து சமூகவலைத்தளங்களில் சுற்றி வருகிறது. விளம்பர வடிவமைப்பைப் பார்த்தாலே அது போலி என்பது தெரிந்துவிடும். சிபி ராஜுடன் நடிகையின் கிளாமர் படமும் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. தொடர்பு கொள்ள ஒரு வாட்ஸ் அப் நம்பரும் தந்திருக்கிறார்கள்.

    இந்த விளம்பரம் குறித்து சிபி ராஜின் காதுகளுக்கும் செய்தி போயிருக்கிறது. பதறிப் போனவர், ப்ரெண்ட்ஸ் இது போலியான விளம்பரம். யாரும் இதற்கு இரையாகாதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார். விளம்பரம் போலி என்பதால் சிபி உடனடியாக மறுப்பு தெரிவித்து எச்சரித்தாரா இல்லை, இவ்வளவு மட்டமான விளம்பரத்தில் நமது படத்தைப் போட்டு இமேஜை டேமேஜ் செய்கிறார்களே என்ற கோபத்தில் எச்சரித்தாரா எனத் தெரியவில்லை.
    சிபி தற்போது மாயோன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், தான்யா நாயகி. விரைவில் இப்படம் வெளிவர இருக்கிறது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: