'கடவுள் என் பிரா சைசை அளவிடுகிறார்' என செய்தியாளர்கள் முன்னிலையில் நடிகை பேசியிருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், நடிகை விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை அளிக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான ஸ்வேதா திவேரி, இந்தி படங்களிலும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பிரபலம் ஆனவர். மாடலிங் துறையிலும் ஸ்வேதா ஈடுபட்டுள்ளார். பெகுசராய், பர்வரிஷ் போன்ற புகழ்பெற்ற சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். பிக் பாஸ் (இந்தி) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2011ம் ஆண்டு வெற்றி பெற்றிருக்கிறர்.
இந்நிலையில் நடிகை ஸ்வேதா புதிதாக "Show Stopper" என்ற வெப் சீரிசில் நடித்துள்ளார். இவருடன் ரோகித் ராய், திகன்கனா சூர்யவன்ஷி, சவுரப் ராஜ் ஜெயின் போன்ற நடிகர்கள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிசின் புரோமோஷன், மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் கடந்த புதனன்று நடந்தது. இதில் ஸ்வேதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
Also read: பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணை, பெண்களே ஊர்வலமாக அழைத்துச் சென்று அடி உதை - டெல்லியில் கொடூரம்... வீடியோ
இந்த நிகழ்வின்போது செய்தியாளர்களிடையே பேசிய நடிகை ஸ்வேதா திவாரி, ‘கடவுள் என் பிராவை அளவிடுகிறார்’ என பேசினார். நடிகையின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. நடிகை ஸ்வேதா, தனது சக நடிகரான சவுரப் ராஜை குறிப்பிட்டே இவ்வாறு பேசியதாக தெரிகிறது. இவர் புகழ்பெற்ற டிவி தொடரான மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணராக நடித்து புகழ் பெற்றவர் ஆவார். "Show Stopper" வெப் தொடரில் சவுரப் ராஜ், பிரா பொருத்துபவராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
நகைச்சுவையாக குறிப்பிடும் நோக்கில் ஸ்வேதா அவ்வாறு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டாலும், இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக மாறியிருக்கிறது. ஸ்வேதா அவ்வாறு பேசிய வீடியோ, சமூக வலைத்தளத்தில் பரவி கடுமையான சர்ச்சையாக மாறிய நிலையில், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் இது தொடர்பாக விசாணை நடத்த போபால் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். 24 மணி நேரத்தில் விசாரணை நடத்தி தன்னிடம் அறிக்கை தாக்கல் செய்ய அவர் பணித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.