திரைக்கதை, வசனம் எழுதி சிவா நடிக்கும் சுமோ!

news18
Updated: July 18, 2019, 9:15 PM IST
திரைக்கதை, வசனம் எழுதி சிவா நடிக்கும் சுமோ!
நடிகர் சிவா மற்றும் பிரியா ஆனந்த்
news18
Updated: July 18, 2019, 9:15 PM IST
‘தமிழ்ப்படம் 2’ படத்தை அடுத்து நடிகர் சிவா சுமோ என்ற படத்தில் நடிக்கிறார்.

தமிழ்ப்படம் 2 படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நடித்துள்ளார் சிவா. இந்தப் படத்தின் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தப் படத்தை அடுத்து பிப்ரவரி 14 படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் உருவாகும் சுமோ படத்தில் சிவா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். இவர்களுடன் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் சிவா திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார். மேலும் சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது.

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

வீடியோ பார்க்க: பாரதிராஜாவின் அரசியல்!

Loading...

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...