ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவின் 'வணங்கான்' கிடப்பில் போடப்படவில்லை... படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் - ஷீகான் ஹூசைனி விளக்கம்!

சூர்யாவின் 'வணங்கான்' கிடப்பில் போடப்படவில்லை... படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் - ஷீகான் ஹூசைனி விளக்கம்!

நடிகர் ஷீகான் ஹூசைனி

நடிகர் ஷீகான் ஹூசைனி

‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு வணங்கான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சூர்யாவின் 'வணங்கான்' கிடப்பில் போடப்படவில்லை என்றும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று நடிகர் ஷீகான் ஹூசைனி தெரிவித்துள்ளார்.

  ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு வணங்கான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கடந்த மே மாதம் நடைபெற்று வந்தது. சூர்யாவை வைத்து ‘பிதாமகன்’, ‘நந்தா’ ஆகிய படங்களை இயக்கியவர் பாலா.

  இதில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். நடிகை மமிதா பைஜூ முக்கிய கேரக்டரில் இப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.

  இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

  ஜி.வி. பிரகாஷ்குமார் வணங்கான் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பை பெற்றது.

  இந்தப் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதிலொன்று காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரம் என ஒரு வதந்தி சுற்றி வருகிறது.

  மேலும், பாலா இயக்கி வந்த படம் கைவிடப்பட்டதாக சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்தன. படம் டிராப்பானது குறித்து தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் விளக்கம் அளிக்கும் என்றும், பாலாவால் சில கோடிகள் இழப்பு ஏற்பட்டதாகவும் வதந்திகள் வந்தன.

  பாலா குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். பாலாவுடன் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் படத்தை வெளியிட்ட சூர்யா மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தார்.

  Also read... முன்னாள் மிஸ் ஆந்திரா... ஐந்து வருடத்திற்குப் பின் நடிப்புக்கு திரும்பிய சத்தம் போடாதே பட நாயகி!

  இந்நிலையில் சாமீபத்தில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டதாக தகவல்கள் வெளினாது. இது குறித்து நடிகர் ஷீகான் ஹூசைனி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

  மேலும், "வணங்கான்' படத்தில் நடிப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், படத்திற்கான புதிய தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும், அதற்காக தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எப்போது வேண்டுமானாலும் படப்பிடிப்பு தொடங்கலாம் என்றும் ஷீகான் ஹூசைனி தெரிவித்துள்ளார்.

  'வணங்கான்' படத்தில் சூர்யா மீனவ வேடத்தில் நடித்துள்ளார் என்றும், அதே சமயம் கிருத்தி ஷெட்டி தமிழில் அறிமுகமாகும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் ஷீகான் ஹூசைனி கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Actor Suriya, Director bala