நடிகர் ஷாரூக்கானுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தே அவர் சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முன்பாக பிரபல நடிகர்களான கார்த்திக் ஆர்யன், ஆதித்யா ராய் கபூர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அடுத்தடுத்து பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் அடுத்த அலை ஏதேனும் தொடங்கி விட்டதா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க - ‘கனவு நிஜமானது...’ கமலுடன் நடித்தது குறித்து சூர்யா நெகிழ்ச்சி!!
ஷாரூக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம்தேதி வெளியாகவுள்ளது.
ஜவான் டைட்டில் அறிவிப்பு வீடியோவை பார்க்க...
இதேபோன்று ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி வரும் முழு நீள ஆக்சன் படமான பதான், அடுத்த ஆண்டு ஜனவரிக்கு திரைக்கு வருகிறது.
இதையும் படிங்க - கமலின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?
அடுத்த ஆண்டு ஷாரூக்கான் நடிப்பில் 3 படங்கள் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜவான் படத்தின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஷாரூக்கான், ஜவான் திரைப்படத்தின் கதை மொழி, எல்லைகளைத் தாண்டி எல்லோருக்கும் பிடிக்கும் என்றும், இதற்காக இயக்குனர் அட்லீக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.