முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இன்று கல்யாண ப்ரொபோசல்கள் வேண்டாமே.. ஃபாலோவர்களைக் கலாய்த்த ஷாரூக் கான்!

இன்று கல்யாண ப்ரொபோசல்கள் வேண்டாமே.. ஃபாலோவர்களைக் கலாய்த்த ஷாரூக் கான்!

ஷாருக்கான்

ஷாருக்கான்

#AskSRK என்ற ஹேஸ்டேக் மூலமாக ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஷாரூக் கான் இன்று கல்யாண ப்ரொபோசல்கள் வேண்டாமே என்று ஃபாலோவர்களைக் கலாய்த்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்துள்ள படம், ‘பதான்’. கடந்த 25-ம் தேதி வெளியான இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடித்து வெளியாகி இருக்கும் இந்தப் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். பதான் திரைப்படத்திற்கு என்ன மாதிரியான விமர்சனம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனத்தையே கொடுத்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் படமாக வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கானுடன் இணைந்து சல்மான்கான் நடித்துள்ளார். படத்தில் சண்டைக் காட்சிகளை வைக்கலாம் ஆனால் சண்டைக்காட்சிகளில் படம் வைக்கப்பட்டுள்ளது என்று கூறும் அளவுக்கு, இதில் ஆக்ஷன் நிறைந்து இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

அந்த வகையில் படக்குழுவினர் அதிக சிரமப்பட்டு எடுத்த ஆக்சன் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. பாலிவுட்டில் முந்தைய படங்கள் செய்த சாதனைகள் சிலவற்றை ஷாருக்கானின் பதான் திரைப்படம் முறியடித்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் ஷாரூக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஸ்டேக் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் ட்விட்டர் பதிவில், வீக் எண்ட் வந்துவிட்டது, #AskSRK என்ற ஹேஸ்டேக் மூலம் நீங்க கேக்குற கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன் என்று தெரிவித்த ஷாரூக் இன்று எனக்கு சளியாக உள்ளது அதனால் கல்யாண ப்ரொபோசல்கள் எதும் வேண்டாமே என்று செல்லமாக ரசிகர்களை கலாய்த்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Shah rukh khan