Home /News /entertainment /

சுதந்திர தினத்தையொட்டி குடும்பத்துடன் தேசிய கொடியை ஏற்றிய ஷாரூக்கான்…

சுதந்திர தினத்தையொட்டி குடும்பத்துடன் தேசிய கொடியை ஏற்றிய ஷாரூக்கான்…

ஷாரூக்கான் தனது குடும்பத்தினருடன்..

ஷாரூக்கான் தனது குடும்பத்தினருடன்..

ஷாரூக்கான் தற்போது அட்லி இயக்கும் ஜவான், பதான் மற்றும் டுங்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, நடிகர் ஷாருக்கான் குடும்பத்துடன் தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

    இதனை ஏற்று பொதுமக்களும், பிரபலங்களும் தேசிய கொடியை ஏற்றி வருகிறார்கள். இது ஒரு பிரச்சாரமாக நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்.

    தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்… ரசிகர்கள் கொண்டாட்டம்

    இதையொட்டி வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த், நாடு இல்லாவிட்டால் நாம் இல்லை, எல்லோரும் தேசிய கொடியை வீட்டில் ஏற்றுவோம் என்று கூறியிருந்தார்.



    இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் ஈசிஆரில் அமைந்துள்ள பனையூர் வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதேபோன்று பல்வேறு பிரபலங்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.

    Thalapathy 67: விஜய்யின் தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான்?

    நடிகர் அர்ஜுன், பாடகி சித்ரா உள்ளிட்டோர் தேசிய கொடியை ஏற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன. இந்நிலையில் இந்தி திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ஷாருக்கான், தனது இல்லத்தில் தேசியக்கொடியை குடும்பத்தினருடன் ஏற்றி சுதந்திர தினத்தைக் கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோவை அவரது ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் பகிர்ந்து வருகின்றனர்.



    ஷாருக்கானின் வீடு மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது. ஷாரூக்கான் தற்போது அட்லி இயக்கும் ஜவான், பதான் மற்றும் டுங்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இன்று இதேபோன்று இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
    Published by:Musthak
    First published:

    Tags: Shah rukh khan

    அடுத்த செய்தி