ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் குறித்து ஷாருக்கான் கூறிய அந்த வார்த்தை... உற்சாகமான ரசிகர்கள்!

விஜய் குறித்து ஷாருக்கான் கூறிய அந்த வார்த்தை... உற்சாகமான ரசிகர்கள்!

விஜய் - அட்லீ - ஷாருக்கான்

விஜய் - அட்லீ - ஷாருக்கான்

நடிகர்கள் விஜய் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகர் விஜய்யை பற்றி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கூலாக பதிலளித்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.

  பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த ஞாயிற்றுக்கிழமை அவர் AskSRK என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது, தளபதி விஜய்யுடன் பணிபுரிவதைப் பற்றி குறிப்பிட்ட அவர் "அவர் மிகவும் கூலானவர்" என்று கூறினார். நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் ஷாருக்கானிடம், விஜய்யுடன் திரையைப் பகிர்ந்து கொள்வது குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.

  ஷாருக்கான் அந்தக் கேள்வியைக் கவனிக்கத் தவறவில்லை. ரசிகருக்குப் பதிலளித்த அவர், "அவர் மிகவும் கூலானவர்... படங்கள் நிகழும்போது தான் நிகழும்... தேவைப்பட்டால் நடிப்பார்கள்" என்று குறிப்பிடார். இதற்கிடையே ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே... நடிகர் கமல் ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

  ஜவான் படத்தின் மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோரும் நடித்துள்ளனர். நடிகர்கள் விஜய் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இப்படத்தில் சிறப்புத் தோற்றங்களில் வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Thalapathy Vijay, Shah rukh khan