Home /News /entertainment /

விஜய்யின் வாரிசு படத்தில் ஷாமின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

விஜய்யின் வாரிசு படத்தில் ஷாமின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?

நடிகர் ஷாம்.

நடிகர் ஷாம்.

'குஷி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஷாம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு 'வாரிசு' படத்தின் மூலம் விஜய்யுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விஜய்யின் வாரிசு படத்தில் நடிகர் ஷாமின் கதாபாத்திரம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவினர் தற்போது விசாகப்பட்டினத்தில் பெரிய ஷெட்யூலில் பணிபுரிந்து வருகின்றனர். 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தின் படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கசிந்து வண்ணம் இருக்கின்றன.

    இதற்கிடையே லேட்டஸ்ட்டாக லீக்கான வாரிசு வீடியோவில், விஜய் மற்றும் ஷாம் ஆகியோர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பல் தொழிலாளர்கள் குழுவுடன் சண்டையிடுவதைக் காண முடிந்தது. இதையடுத்து படத்தில் விஜய்யின் சகோதரராக ஷாம் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    'குஷி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஷாம், 22 ஆண்டுகளுக்குப் பிறகு 'வாரிசு' படத்தின் மூலம் விஜய்யுடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வாரிசு படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். அதோடு விஜய்யுடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளதால், தனது பெஸ்ட்டை கொடுக்கும் நோக்கில், அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள 'வாரிசு' திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்றும், படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நகைச்சுவை, காதல், ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த கலவையாக உருவாகும் வாரிசு படம் டப்பிங் செய்யப்பட்ட தெலுங்கு பதிப்போடு வெளியிடப்படும்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Thalapathy Vijay

    அடுத்த செய்தி