ட்விட்டரில் கணக்கு தொடங்கியது உண்மையா? செந்தில் விளக்கம்

ட்விட்டர் என்றால் என்னவென்றே தெரியாது என்று நகைச்சுவை நடிகர் செந்தில் கூறியுள்ளார்.

ட்விட்டரில் கணக்கு தொடங்கியது உண்மையா? செந்தில் விளக்கம்
நடிகர் செந்தில்
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் செந்தில். இன்றும் கவுண்டமணி - செந்தில் நடித்த நகைச்சுவை காட்சிகள் மக்களை சிரிப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன. 2000-க்கு பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட செந்தில் தொடர்ச்சியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் 2018-ம் ஆண்டு தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்த செந்தில் சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ராசாத்தி என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் செந்தில் ட்விட்டரில் இணைந்துவிட்டதாகவும், அவரது பெயரில் போலி ட்விட்டர் கணக்கும் தொடங்கப்பட்டது. அதில் வெளியான அறிக்கையில், “நான் உங்கள் காமெடி நடிகர் செந்தில், கொரோனா வைரஸ் பரவுவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடைசியாக நான் சூர்யா தம்பியுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தேன்.


கூடிய விரைவில் இன்னும் படங்களில் நடித்து உங்களை சந்தோஷம் ஆக்குவேன் என்று நம்புகிறேன். அதுவரை உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசை பட்டேன் எனவே நான் தற்போது டுவிட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன் அனைவரும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்று பதிவிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருக்கும் நடிகர் செந்தில், ட்விட்டர் என்றால் என்னவென்றே தனக்கு தெரியாது. அந்த அறிக்கை போலியானது. ஆரோக்கியமான உடல் நிலையுடன் முக கவசம் அணிந்து வீட்டில் பாதுகாப்புடன் இருக்கிறேன். நீங்களும் குடும்பத்தாரை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading