முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'சொல்ல சொன்னாங்க.. சொன்னேன்..' நடிகை ஆடை சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த சதீஷ்!

'சொல்ல சொன்னாங்க.. சொன்னேன்..' நடிகை ஆடை சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த சதீஷ்!

சதீஷ்

சதீஷ்

படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சன்னிலியோன் உட்பட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டு பேசினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை தர்ஷா குப்தா சொல்லிதான் அப்படி பேசினேன் என்று ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகர் சதீஷ் விளக்கமளித்துள்ளார்.

சிந்தனை செய் படத்தின் இயக்குனரான ஆர்.யுவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஓ மை கோஸ்ட். இதில் நடிகை சன்னி லியோன் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சன்னிலியோன் உட்பட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டு பேசினர்.

அபோது நடிகர் சதீஷ் பேசுகையில், நடிகை சன்னி லியோன் பாம்பேல இருந்து நமக்காக தமிழ்நாட்டுக்கு வந்துருக்காங்க அவங்க எப்படி ட்ரெஸ் பன்னிருக்காங்க பாத்தீங்க... கோயம்பத்தூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்துருக்கு தர்ஷா குப்தா... சும்மா சொன்னேன் என்று தர்ஷாவின் ஆடையை கிண்டலடிக்கு விதமாக பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு இயக்குநர் நவீன், சின்மயி உட்பட பல திரைப் பிரபலங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Also read... வாரிசு படத்துக்கு தியேட்டர் சிக்கலா? துணிவு விநியோகஸ்தர் உதயநிதி சொன்னது இதுதான்!

அதில், ஓ மை கோஸ்ட் படத்தில் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்தது. அதில் என்னுடன் நடித்த தர்ஷா குப்தா எனது பக்கத்தில் அமர்ந்து நான் இன்னைக்கு சன்னி லியோன் விட மார்டனா ட்ரெஸ் பன்னிட்டு வந்துர்கேன்.. அவங்க எப்படி வராங்கனு பாப்போம்னு சொன்னாங்க. பாத்தா சன்னி லியோன் பட்டு புடவை கட்டிட்டு வந்துர்ந்தாங்க அத பாத்தா தர்ஷா அப்செட் ஆகிட்டு சொன்னாங்க.. என்னங்க நான் இப்படி வந்துர்கன் அவங்க அப்படி வந்துட்டாங்க நான் அத பாத்து அப்செட் ஆகிட்டனு நீங்க ஸ்டேஜ்ல பேசும்போது சொல்லுங்க என்று தர்ஷா கூறியதாக சதீஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சதீஷ், ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் சாதரனமா பேசி அத அவங்க சொல்லிதான் ஸ்டேஜ்லையும் பேசினேன் அது இப்போ இப்படி பேசுறாங்க... ஆடை என்பது அவர்கள் உரிமை என்று ஆமா நானும் அத ஏத்துக்குறேன். மேலும், திரைப் பிரபலங்கள் மூடர் கூடம் நவீன், சிங்கர் ஸ்ரீனிவாஸ், சின்மயி, டாக்டர் ஷர்மிளா எல்லாம் இத பத்தி பேசியிருந்தாங்க... அவங்களுக்கும் சொல்லிக்கிறேன் இது இப்படி நடந்ததுதான் என்று தெரிவித்துள்ளார்.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Sathish, Actress Sunny Leone