முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே' - சத்யராஜின் திரைப்பயணம்!

’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே' - சத்யராஜின் திரைப்பயணம்!

சத்யராஜ்

சத்யராஜ்

பாரதிராஜாவின் 'கடலோரக் கவிதைகள்' சத்யராஜுக்கு கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்தது. தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்தார் சத்யராஜ்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் சினிமாவால் புரட்சி தமிழன் என அழைக்கப்படுவர் நடிகர் சத்யராஜ்.

'சட்டம் என் கையில்' திரைப்படத்தில் சினிமாவில் அறிமுகமாகி சிறு சிறு வேடங்களில் தலை காட்டிய சத்யராஜை தலை எடுக்க வைத்தது மணிவணணன் இயக்கிய 'நூறாவது நாள்' திரைப்படம். மொட்டை தலையுடன் வில்லத்தனம் புரிந்த சத்யராஜை கண்டு மிரண்டது தமிழ் சினிமா.

நூறாவது நாள்', திரைப்படத்தின் வெற்றி சத்யராஜை முன்னனி நாயகர்களின் மெயின் வில்லனாக்கியது. நக்கல் நைய்யாண்டி மொழியுடன் கூடிய எள்ளல் தொனியில் சத்யராஜ் பேசும் வசனங்களுக்கு தனி ரசிக கூட்டமே உருவானது. 'தகடு தகடு', ….’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே'…. 'என்னம்மா கண்ணு' போன்ற வசனங்கள் சத்யராஜின் ப்ரேண்டிங் வசனமாகின.

sathyaraj, sathyaraj age, sathyaraj son, sathyaraj daughter, tamil sathyaraj, sathyaraj movie tamil, sathyaraj movies 2021, sathyaraj movies latest, sathyaraj age, sathyaraj movies, sathyaraj, சத்யராஜ், நடிகர் சத்யராஜ், சத்யராஜ் படங்கள், வில்லனாக மிரட்டிய சத்யராஜ்

பாரதிராஜாவின் 'கடலோரக் கவிதைகள்' சத்யராஜுக்கு கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்தது. தாஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்தார் சத்யராஜ். முரட்டுதனம் ஆகட்டும் காதலால் உருகுவதாகட்டும் நடிப்பில் அசத்திய சத்யாராஜின் கேரக்டரை தமிழ் சினிமா புரிந்து அவரை வெற்றி நாயகனாக்கியது.

'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு', 'பூவிழி வாசலிலே', 'பாலைவன ரோஜாக்கள்'…'அண்ணாநகர் முதல் தெரு', 'சின்னதம்பி பெரியதம்பி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் தன் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நாயகர்களின் வரிசையில் தனி இடம் பிடித்தார் சத்யராஜ். குறிப்பாக 'அமைதிப்படை' திரைப்படம் சத்யராஜின் ஹிட் படங்களின் வரிசையில் முதல் இடம் பிடித்தது.

Also read... விநியோகஸ்தர்களின் ரெட் கார்டை உடைத்து வெற்றி பெற்ற ரஜினி படம்

சத்யராஜ் -கவுண்டமணி கூட்டணி தாறுமாறு ஹிட்டானது. வேல கெடச்சிடுச்சி, மாமன் மகள்’. ’புது மனிதன்’, தாய் மாமன்… ரிக்‌ஷா மாமா.. பிரம்மா.. நடிகன் …உள்ளிட்ட பல படங்களில் இவர்களின் நக்கல் நய்யாண்டிகளில் சிரிப்பால் விக்கல் எடுத்தனர் சினிமா ரசிகர்கள்.

'நண்பன்' …… 'தலைவா'.. 'ராஜா ராணி'.,.. 'சென்னை எக்ஸ்பிரஸ்'.. 'கடைக்குட்டி சிங்கம்'….., 'கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்த சத்யராஜ் பாகுபலியில் கட்டப்பாவாக நடித்து ….’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே'….என இந்திய ரசிகர்களுக்கும் ஆணித்தரமாக தன் திறமையை எடுத்துச் சொன்னார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor sathyaraj