முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Etharkkum Thunindhavan: நடிகர் சூர்யாவுக்கு ‘புரட்சி நாயகன்’ என பட்டம் சூட்டிய சத்யராஜ்!

Etharkkum Thunindhavan: நடிகர் சூர்யாவுக்கு ‘புரட்சி நாயகன்’ என பட்டம் சூட்டிய சத்யராஜ்!

சூர்யா மற்றும் சத்யராஜ்

சூர்யா மற்றும் சத்யராஜ்

Etharkkum Thunindhavan: ஜெய்பீம் போன்ற படத்தில் நடித்ததே துணிவு தான். அவருக்கு புரட்சி நாயகன் சூர்யா என பட்டம் கொடுக்கிறேன் என்றும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் எதற்கும் துணிந்தவன் சூர்யா என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். டி இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்யாவுடன் பிரியங்கா அருள் மோகன், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, சுப்பு பஞ்சு உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10-ம் தேதி வெளியாகிறது. இது குறித்து சென்னையில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சத்யராஜ், திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் எதற்கும் துணிந்தவன் சூர்யா என்று பாராட்டியுள்ளார்.

ஜெய்பீம் போன்ற படத்தில் நடித்ததே துணிவு தான். அவருக்கு புரட்சி நாயகன் சூர்யா என பட்டம் கொடுக்கிறேன் என்றும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்பேத்கர், பெரியார் கருத்துகளை திரைப்படங்களில் அதிகம் காட்ட வேண்டும். சூர்யா ரசிகர்கள் அவரை பின்பற்ற வேண்டும். கல்விக்கொடை, வள்ளல் தன்மை, எதையும் துணிச்சலாக பேசுவதை பின்பற்றவும் என சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

Also read... Hansika: சயின்டிஸ்ட் நேத்ராவாக மாறும் ஹன்சிகா...!

தொடர்ந்து பேசிய சத்யராஜ், திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். எம்ஜிஆர் அப்படித்தான் இருந்தார்.  பெரியார் சீடன் என்பதால் என் மனதில் பட்டதை அப்படியே பேசுவேன். அதனால் எனக்கு மார்க்கெட் போனாலும் பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actor sathyaraj, Actor Suriya