காதல் செய்து தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை... லவ் பண்ணவே கூடாது - நடிகர் சதீஷ்

காதல் செய்து தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை... லவ் பண்ணவே கூடாது - நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ்

காதல் செய்து தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை என்று காதல் திருமணத்திற்கு எதிராக திரைப்பட நடிகர் சதீஷ் பேசியுள்ளார்.

  • Share this:
திண்டுக்ககல் பழனி சாலையில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட நடிகர் சதீஷ், “பண்ணவே கூடாத ஒரு விசயம் இருக்கிறதென்றால் அது லவ். அது நமக்கு தேவையில்லாத சுமையை உருவாக்கும். அது படிப்பைக் கெடுக்கும். உங்களின் நல்ல நட்பைக்கெடுக்கும். பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்.

சாதி ஒழிவதற்கு காதல் திருமணம் தான் கரெக்ட் என்று சொல்வார்கள். சாதியை ஒழிக்க காதல் திருமணம் தான் என்றில்லை. அண்ணன் தங்கச்சியாக, அக்கா தம்பியாக பழகலாம் நல்ல நண்பர்களாக பழகினாலே சாதியை ஒழிக்கலாம்.

எல் (L) என்றால் லாஸ், ஓ (O) என்றால் ஒன்னும் இல்லை. வி (V) என்றால் வேணாம். இ (E) என்றால் எதுக்கு? என்று காதலுக்கு புது விளக்கமளித்தார். அரசு சாதிமறுப்பு காதல் திருமணங்களை ஊக்குவித்து அரசு வேலைகளில் முன்னுரிமையும் சமூகநலத்துறை மூலமாக அவர்களுக்கு திருமண உதவிதொகையும் கொடுத்து வரும் நிலையில் காதல் திருமணத்துக்கு எதிராக நடிகர் சதீஷ் தனது கருத்தை மாணவர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியுடன் நடிகர் சதீஷ் நடித்திருந்த ‘பூமி’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக ஹர்பஜன் சிங் உடன் ஃபிரெண்ட்ஷிப், ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சதீஷ்.

செய்தியாளர்: ஆர். சங்கர்

திண்டுக்கல்.
Published by:Sheik Hanifah
First published: