• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Vivek: ’முதல் முறையாக அழுகிறேன்’ - விவேக் குறித்த வீடியோவை பதிவிட்ட சதீஷ்

Actor Vivek: ’முதல் முறையாக அழுகிறேன்’ - விவேக் குறித்த வீடியோவை பதிவிட்ட சதீஷ்

விவேக் - சதீஷ்

விவேக் - சதீஷ்

மறைந்த நடிகர் விவேக்கின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டுள்ள நடிகர் சதீஷ், முதன் முறையாக தான் அழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    மறைந்த நடிகர் விவேக்கின் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டுள்ள நடிகர் சதீஷ், முதன் முறையாக தான் அழுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் - திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Sathish (@actorsathish)






    இந்நிலையில், நகைச்சுவை நடிகர் சதீஷ், நடிகர்கள் விவேக், மயில்சாமி, செல் முருகன் உள்ளிட்டோர் பங்குபெறும் ஒரு படப்பிடிப்பு காட்சியை வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் நடிகர் மயில்சாமி இன்ஸ்பெக்சன் என்கிற வசனத்தை சொல்வதற்கு சிரமப்பட, விவேக் அதற்கு உதவி செய்கிறார். மயில்சாமி ஒவ்வொரு முறை முயற்சி செய்யும் போது அது பார்வையாளர்களுக்கு சிரிப்பை வரவைக்கிறது. பின்னர் ஒரு வழியாக சரி விடுங்க, அந்த வார்த்தையை டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். மயில்சாமிக்கு உதவி செய்யும் விவேக் ‘வீடியோ எடுக்குறீங்களா’ என யதார்த்தமாகக் கேட்கிறார்.

    இந்த வீடியோவை பதிவிட்டிருக்கும் சதீஷ், ”தங்களை சந்திக்கும் போதெல்லாம் இந்த video வை பார்த்து சிரிப்போம்... முதல் முறையாக அழுகையுடன்... Miss u Vivek sir” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: