உனக்கென்னப்பா ஒரு ஹீரோயின் கிடைச்சுட்டாங்க... சதீஷுக்கு ப்ரியா பவானி சங்கர் பதில்

உனக்கென்னப்பா ஒரு ஹீரோயின் கிடைச்சுட்டாங்க... சதீஷுக்கு ப்ரியா பவானி சங்கர் பதில்

ப்ரியா பவானி சங்கர் | நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷின் ட்விட்டர் பதிவுக்கு ஜாலியாக பதிலளித்துள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

  • Share this:
2010-ம் ஆண்டு ‘தமிழ் படம்’மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சதீஷ் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தி வருகிறார். தற்போது ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் சதீஷ் அடுத்ததாக ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

யார்க்கர் ஃபிலிம்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறவருமான கிஷோர் ராஜ்குமார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சதீஷுக்கு ஜோடியாக குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி நடிக்கிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் சதீஷ் கடந்த 10-ம் தேதி ப்ரியா பவானி சங்கரின் ட்விட்டர் பதிவுக்கு நகைச்சுவையாக பதிலளித்திருந்தார். ப்ரியா பவானி சங்கர் தனது புதிய புகைப்படத்தை பதிவிட்டு நான் என்ன நினைக்கிறேன் என்று எழுதியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த நடிகர் சதீஷ், தன்னுடன் ஹீரோயினாக நடிக்க முடியாமல் போய்விட்டதே என்று ப்ரியா நினைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

சதீஷின் இந்த நகைச்சுவையான பதிவைக் குறிப்பிட்டு பதிலளித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர், உனக்கென்னப்பா ஒரு ஹீரோயின் கிடைச்சுட்டாங்க என்று ஜாலியாக கூறியுள்ளார். இருவரது ஜாலியான உரையாடலும் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.மேயாதமான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் அடுத்தடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் இந்தியன்2, பத்துதல, ருத்ரன் உள்ளிட்ட பல திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: