ரொமான்ஸில் பின்றீங்க சகோ... சமுத்திரகனியை வாழ்த்திய 'பேட்ட' நடிகர்!

'சில்லு கருப்பட்டி’ படத்தின் டீசரைப் பார்த்த சசிகுமார், நடிகர் சமுத்திரகனி மற்றும் படக்குழுவை வாழ்த்தியுள்ளார். 

ரொமான்ஸில் பின்றீங்க சகோ... சமுத்திரகனியை வாழ்த்திய 'பேட்ட' நடிகர்!
சமுத்திரகனி
  • News18
  • Last Updated: December 26, 2018, 6:26 PM IST
  • Share this:
'சில்லு கருப்பட்டி’ படத்தின் டீசரைப் பார்த்த சசிகுமார்,  நடிகர்  சமுத்திரகனி மற்றும் படக்குழுவை வாழ்த்தியுள்ளார். 

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரகனி மற்றும் சுனைனா நடித்துள்ள படம் சில்லு கருப்பட்டி. பூவரசம் பீப்பீ படத்தை  தொடர்ந்து ஹலீதா ஷமீம் இயக்கும் இரண்டாவது படம் இது.

இந்தப் படத்தில் சாரா அர்ஜூன், நிவேதிதா, சதீஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒகே  ஒகே கண்மணி படத்தில் நடித்த லீலா சாம்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மேலும் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. படத்தில் 4 ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியுள்ளார்கள். மனோஜ் பரஹம்ஷா, அபிநந்தன், ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் ஒளிப்பதிவில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு பிரதீப் இசையமைத்துள்ளார்.


படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா ஆகியோர் இன்று வெளியிட்டனர். டீசரைப் பார்த்த நடிகரும் இயக்குநருமான சசிகுமார், சில்லு கருப்பட்டி படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இது குறித்த தனது ட்விட்டர் பதிவில், "சகோ ரொமான்ஸ் பின்றீங்க" என்று குறிப்பிட்டுள்ளார்.பேட்ட படத்தில் மாலிக் என்ற கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
First published: December 26, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்