• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு செயின் பரிசளித்து பாராட்டிய சசிகுமார்!

வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு செயின் பரிசளித்து பாராட்டிய சசிகுமார்!

சசிகுமார் - பவானி தேவி

சசிகுமார் - பவானி தேவி

வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவியை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார் நடிகர் சசிகுமார்.

  • Share this:
    வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவியை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார் நடிகர் சசிகுமார்.

    தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துக் கொண்டார். ஆனால் சில புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

    இதையடுத்து பவானிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. டோக்கியோவிலிருந்து சென்னை திரும்பிய வாள் வீச்சு வீராங்கனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வென்றால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம். தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இது தான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை வீடு தேடிப்போய் சந்தித்து, தங்க செயின் பரிசளித்து, “விடாமுயற்சியுடன் போராடு... அடுத்த முறை வெல்லலாம்” என நம்பிக்கை கொடுத்திருக்கிறார் நடிகர் சசிகுமார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: