Home /News /entertainment /

கணம் போன்ற ஒரு கதைக்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன் - நடிகர் சர்வானந்த்!

கணம் போன்ற ஒரு கதைக்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன் - நடிகர் சர்வானந்த்!

கணம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு

கணம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு

கணம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் சர்வானந்த், அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக்,  மற்றும் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு நல்ல கதையுடன் மீண்டும் தமிழில் நடிக்க வேண்டும் என நினைத்தேன் எனவும் அந்தப் படமாக கணம் இருக்கும் என நடிகர் சர்வானந்த் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கியுள்ள கணம் திரைப்படம் வரும் 9-ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. அந்த திரைப்படத்தில் சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.  அவர்களுடன் 30 ஆண்டுகளுக்கு பிறகு அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கணம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் சர்வானந்த், அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக்,  மற்றும் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் பேசிய நாசர், எனக்கு டைம் டிராவல் போன்ற Science Fiction படங்கள் அதிகம் பிடிக்கும். இந்தியாவில் இந்த வகை படங்கள் ஏன் வருவதில்லை என்ற வருத்தம் இருந்தது. இந்த நிலையில் ஸ்ரீ கார்த்தி கணம் கதையுடன் வந்தார். அவருடன் கதைக்காக நிறைய சண்டைப்போட்டோம். படம் சிறப்பாக வந்துள்ளது என கூறினார்.

அதேபோல், அமலா பேசுகையில் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறேன். இயக்குனர் ஸ்ரீ கார்த்தி, தன்னுடைய அம்மாவை மையமாக கொண்டு இந்த கதையை உருவாக்கியுள்ளார். அவர் நம்முடன் இருந்து படத்தை பார்ப்பார். கணம் படம் நிச்சயம் வெற்றியடையும் என் தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய நாயகன் சர்வானந்த், எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தேன். அதன் பின் தமிழில் நடிக்க வேண்டும் என்றால் சிறந்த கதையில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அந்த படமாக கணம் இருக்கும். மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிக முக்கிய இயக்குனராக இருப்பார் என கூறினார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், கணம் படத்தின் வேலைகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. கொரோனா காலகட்டம் என பல இருந்தாலும் அதை படத்தின் நலனுக்கு எடுத்துகொள்ளலாம். முதலில் இந்த கதை நடிகர் ஸ்ரீ தான் கொண்டுவந்தார். கதை நன்றாக இருந்தது. அவருக்கான பட்ஜெட்டில் இந்த கதையை படமாக்கினால், அது மிக குறைந்த தரத்தில் இருக்கும். எனவே அவரிடம் இதை கூறினேன், அவரும் புரிந்துகொண்டார். நான் நடிக்க வேண்டும் என்று இல்லை. யாரை வைத்து வேண்டுமானாலும் எடுங்கள் என்று கூறினார். அவருக்கு முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

Also read... இன்று மாலை நடைபெறுகிறது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா!

அதன் பிறகுதான் தமிழ் தெலுங்கில் எடுக்க திட்டமிட்டு சர்வானந்தை ஒப்பப்தம் செய்தோம். அதேபோல் ஸ்ரீ கார்த்தி மிகவும் ஆர்வமாக இருந்தார். இந்தப் படத்தில் அமலாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அவர் தற்போது நடிப்பது இல்லையே என்றேன். இறுதியாக கதை கேட்க வைக்க முயற்சித்தோம், கதையே கேட்டப்பின் நடிக்க சமதித்தார் என கூறினார். மேலும் ஒரு நல்ல கதை எந்தனை ஆண்டுகளுக்கு பிறகு வந்தாலும் வெற்றியடையும். இந்தப் படம் நிச்சயம் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

இயக்குனர் ஸ்ரீ கார்த்தி பேசும்போது, நேரத்தை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதிலும் என் அம்மாவை மனதில் வைத்து கதை எழுத திட்டமிட்டு உருவாக்கினேன். இதில் சர்வானந்த் சிறப்பாக நடித்துள்ளார். இரு சிறந்த கதை அதற்கானவற்றை அதுவே தேடிக்கொள்ளும் என்பார்கள். அந்த வகையில்தான் சர்வானந்தை தேடிகொண்டது. இந்தப் படத்தை அவரைவிட யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது. கணம் நிச்சயம் நன்றாக இருக்கும் என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Nasser, Entertainment

அடுத்த செய்தி