Home /News /entertainment /

தனுஷ் படத்தில் நடிக்கும் சார்பாட்ட பரம்பரை பட நடிகர்

தனுஷ் படத்தில் நடிக்கும் சார்பாட்ட பரம்பரை பட நடிகர்

தனுஷ், சார்பட்டா பரம்பரை படத்தில் சரவணவேல்

தனுஷ், சார்பட்டா பரம்பரை படத்தில் சரவணவேல்

படத்தின் கதை சர்வதேச சினிமா ரசிகர்களையும் கவரக்கூடும் என்பதால், தயாரிப்பாளர்கள் படத்திற்காக ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
    தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் சார்பாட்ட பரம்பரை படத்தில் நடித்த சரவணவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் - தனுஷ் அடுத்ததாக 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் இணைகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த படம் 1980 களில் நடக்கும் கேங்ஸ்டர் கதை  என்றும், அதன் தலைப்பான மில்லர் படத்தில் தனுஷின் கதாபாத்திரத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷ் 3 கேரக்டர்களில் நடிக்கிறார்.

    மேலும் படத்தை பான்-இந்தியா திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். படத்தின் கதை சர்வதேச சினிமா ரசிகர்களையும் கவரக்கூடும் என்பதால், தயாரிப்பாளர்கள் படத்திற்காக ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளனர். தனுஷின் இதுவரையிலான படங்களிலேயே அதிக பொருட்செலவுப் படமாக கேப்டன் மில்லர் அமையும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

    Also read... 'The Legend' ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல முன்னணி நிறுவனம்



    இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் சார்பாட்ட பரம்பரை படத்தில் ஆர்யாவின் நண்பனாக நடித்த நடிகர் சரவணவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor dhanush

    அடுத்த செய்தி