Home /News /entertainment /

அதிரடி சண்டைக் காட்சிகளுடன் வெளிவந்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் 'தி லெஜண்ட்' பட போஸ்டர்

அதிரடி சண்டைக் காட்சிகளுடன் வெளிவந்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் 'தி லெஜண்ட்' பட போஸ்டர்

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி வரும் தி லெஜெண்ட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன், தனது வர்த்தக நிறுவனம் தொடர்பான விளம்பரக் காட்சிகளில் நடித்து தனக்கென ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியுள்ளார். தற்போது அவர், ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் 'தி லெஜெண்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    கொரோனாவுக்கு முன்னரே இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போதுதான் படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்துள்ளது.


    இதில், வெறும் குடையுடன் ஒற்றை மனிதராக ரவுடிகளை லெஜெண்ட் சரவணா பந்தாடுவதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இதையும் படிங்க - பிக் பாஸ் அல்டிமேட்டில் சிம்பு வெளியேற்ற போகும் போட்டியாளர் இவரா? தீயாய் பரவும் தகவல்!

    நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மோஷன் போஸ்டரின் பின்னணி இசை அட்டகாசமாக உள்ளதென ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க - வேறுபாடுகள் காரணமாக தனுஷ் படத்திலிருந்து விலகுகிறேன் - பாடலாசிரியர் விவேக்

    தி லெஜெண்ட் படத்திற்கு வைரமுத்து, கபிலன், பா.விஜய், ஸ்நேகன், மதன் கார்க்கி போன்ற முன்னணி பாடலாசிரியர்கள் பாடல் எழுதியுள்ளனர். இதன் மூலம் படத்தில் பாடலுக்கும் இசைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம்.

    தமிழில் பல விளம்பரங்களை இயக்கி ஜேடி-ஜெர்ரி, முன்பு அஜித் விக்ரம் நடித்த உல்லாசம், விசில் ஆகிய படங்களை இயக்கியுள்ளனர். விரைவில் தி லெஜெண்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த சின்னக் கலைவாணர் விவேக் நடித்த கடைசி திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Saravanan

    அடுத்த செய்தி