நடிகர் சரத்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா முதலாம் மற்றும் இரண்டாம் அலையில் பாதிக்கப்படாத பெரும்பான்மையான நடிகர்கள், மூன்றாவது அலையின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் நடிகை திரிஷா, வடிவேலு, மகேஷ்பாபு, சத்யராஜ், விஷ்ணு விஷால், கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அதிலிருந்து அவர்கள் ஒவ்வொருவராக அதிலிருந்து குணமடைந்தனர்.
கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. திரையரங்குகள் வழக்கம் போல் 50% பார்வையாளர்களுடன் செயல்பட்டன. இதையடுத்து, சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் பெரிய
பட்ஜெட் படங்கள், ரிலீஸ் தேதிகளை அறிவித்து வருகின்றன. அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில் தற்போது சமத்துவ மக்கள் கட்சித்தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.