Home /News /entertainment /

சரத்குமாரிடம் தளபதி 66 அப்டேட்டை இனிமேல் யாரும் கேட்க மாட்டார்கள்!! அப்படியொரு பதில்…

சரத்குமாரிடம் தளபதி 66 அப்டேட்டை இனிமேல் யாரும் கேட்க மாட்டார்கள்!! அப்படியொரு பதில்…

விஜய்யுடன் சரத்குமார்

விஜய்யுடன் சரத்குமார்

Thalapathy 66 SarathKumar : விஜய் பிறந்தநாள் வரும் 22ம் தேதி வருகிறது. இதையொட்டி, தளபதி 66 படத்தின் டைட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் அப்டேட் குறித்து சரத் குமாரிடம் கேட்கப்பட்டது. இதற்கு நச்சென்ற பதிலை அவர் அளித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ அதிகம் ரசிக்கப்படுகிறது.

தளபதி 66 படத்தில் விஜய்யுடன் சரத் குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா என பிரபல நட்சத்திரங்கள் பலர் நடித்து வருகின்றனர். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஆக்சன் படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய்க்கு இந்தப் படம் வித்தியாசமாக அமையும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க - சித்து மூஸ்வாலாவைப் போல கொல்லப்படுவீர்கள்... நடிகர் சல்மான் கானிற்கு மிரட்டல் கடிதம்

தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார். இவர் தமிழில் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்த தோழா படத்தை இயக்கியிருந்தார்.

கடைசியாக வம்சியின் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த மகரிஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், விஜய் ரசிகர்கள் வம்சி மீது நம்பிக்கையுடன் உள்ளார்கள்.

விஜய் பிறந்தநாள் வரும் 22ம் தேதி வருகிறது. இதையொட்டி, தளபதி 66 படத்தின் டைட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரத்குமாரிடம் செய்தியாளர்கள் தளபதி 66 அப்டேட்டை கேட்டனர்.

இதையும் படிங்க - தனுஷிற்கு ஜோடியாகும் நடிகை கிருத்தி ஷெட்டி... எந்த படத்தில் தெரியுமா?

அதற்கு அவர் அளித்த பதிலில், ‘தளபதி 66 படத்தில் நடித்து வருகிறேன். இதில் என்ன நடிக்கிறேன், எப்படி நடிக்கிறேன், என்ன கேரக்டர் பண்ணுகிறேன் என்பதை வெளியே சொல்ல முடியாத சூழலில் உள்ளேன். எப்படியும் உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) தெரியாமல் இருக்காது. பின்னர் தெரிந்து கொண்டு, இதுதானா சார் என்று கேட்பீர்கள். தளபதி 66 அப்டேட்டை இயக்குனர் அவர்களும், தயாரிப்பாளர் அவர்களும் நேரடியாக கலந்து பேசுகின்ற கலந்துரையாடலில் தெரிவிப்பார்கள்’ என்றார்.
Published by:Musthak
First published:

Tags: Actor Vijay, Sarathkumar

அடுத்த செய்தி