முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''சூர்யவம்சம் கதை.. வரலட்சுமியின் வளர்ச்சி..'' மேடையில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட சரத்குமார்

''சூர்யவம்சம் கதை.. வரலட்சுமியின் வளர்ச்சி..'' மேடையில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட சரத்குமார்

சரத்குமார்

சரத்குமார்

சூரியவம்சம் படத்தை முதலில் பார்த்தவர்கள் என்ன படம் இது என விமர்சித்தனர் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் பிரபல கன்னட இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் 'கொன்றால் பாவம்' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஆசையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் உடன் சந்தோஷ் பிரதாப்,  சார்லி, இயக்குனர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சரத்குமார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  அந்த படத்தின் டிரைலரை வெளியிட்ட சரத்குமார் மேடையில் பேசினார். அப்போது எதுவும் சிறிய திரைப்படம் பெரிய திரைப்படம் என்றெல்லாம் கிடையாது. எந்த திரைப்படம் வெற்றி அடைகிறதோ, அது பெரிய திரைப்படம் என்று தெரிவித்தார்.

மேலும் தன்னுடைய சூரியவம்சம் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு சிலருக்கு ப்ரீமியர் காட்சி போட்டுக் காட்டியதாகவும், அதை பார்த்த அனைவரும் என்ன படம் எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று விமர்சித்தனர்.  ஆனால் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.  விமர்சனத்தை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. இது யாருக்கான படம் என்பதை பற்றிதான் நினைக்க வேண்டும்.  மக்கள் ஏற்றுக் கொண்டால் அது பெரிய படம் என்று கூறினார்.  அந்த வகையில் 'கொன்றால் பாவம்' திரைப்படம் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சரத்குமார் கூறினார்.

மேலும் தன்னுடைய மகள் வரலட்சுமி சரத்குமார் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டார். அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. அவரின் வளர்ச்சியை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் வீரசிம்ஹா ரெட்டி திரைப்படத்தில் அவர் நடித்த காட்சியை நடிகர் பாலாகிருஷ்ணா தன்னை ஐதராபாத்திற்கு அழைத்து வெளியீடிருக்கும் முன்பே போட்டு காட்டியதாகவும், வரலட்சுமியின் நடிப்பை  பார்த்து அவர்கள் பாராட்டியதாகவும் சரத்குமார் கூறினார். அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தி வருகிறார் எனவும் பெருமிதம் கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sarathkumar, Varalakshmi sarathkumar