ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஐஸ்வர்யாராயுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க கூச்சமாக இருந்தது - நடிகர் சரத்குமார்

ஐஸ்வர்யாராயுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க கூச்சமாக இருந்தது - நடிகர் சரத்குமார்

படப்பிடிப்பு தளத்தில் பார்திபன், ஐஸ்வர்யா ராய், சரத்குமார்

படப்பிடிப்பு தளத்தில் பார்திபன், ஐஸ்வர்யா ராய், சரத்குமார்

பொன்னியின் செல்வன் திரைப்படம் தவிர கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதாகவும் பட்டியலிட்டார். 

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவாட்டியார் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நடிகர் சரத்குமார் தெரிவித்திருக்கிறார். 

மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகிறது. இந்த நிலையில் பெரிய பழுவேட்டையராக நடித்துள்ள சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பலரும் எடுக்க நினைத்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது மணிரத்னத்தால் சாத்தியமாகியுள்ளது.  இந்த படம் வெளியான பிறகு சோழ சாம்ராஜ்யத்தை பற்றி குறித்து அனைவரும் தெரிந்து கொள்வார்கள். குறிப்பாக அவர்களின் திறமை, கடல் கடந்த வாணிபம், கப்பல் போக்குவரத்தில் சிறந்து விளங்கியது உள்ளிட்டவை தெரியவரும்.

வட இந்தியாவில் இன்னும் கோட்டைகள் உள்ளன. ஆனால் இங்கு இல்லை.  அதேபோல் தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா தளமாக இன்னும் மேம்படுத்த வேண்டும். முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலை அனைவாரும் பார்க்கும் இடமாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

அதன் பின் ரஜினிகாந்த் பெரிய பழுவேட்டையராக நடிக்க விரும்பியது குறித்த கேள்விக்கு,  அவர் நடித்திருந்தால் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் உடல்வாகு அந்த அளவுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை.  இருந்தாலும் சினிமாவில் அனைத்தும் சாத்தியம். எனவே ரஜினிகாந்த் பெரிய பழுவேட்டையராக நடித்திருந்தால் நன்றாகதான் இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.

அத்துடன் வானம் கொட்டட்டும் படப்பிடிப்பில் தன்னை பார்த்த பிறகே பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திற்கு மணிரத்னம் தேர்வு செய்தார் எனவும் கூறினார்.

Also read... பொன்னியின் செல்வன் கதையில் கமல் நடிக்க விரும்பிய கேரக்டர் என்ன தெரியுமா?

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது தனக்கு கூச்சமாக இருந்ததாக சரத்குமார் கூறினார்.  அதை பார்த்துவிட்டு இயக்குனர் மணிரத்னம் உங்களுக்கு ரொமான்ஸ் வராதா என்று கேள்வி எழுப்பியதாகவும், அதன் பின் இயல்பாக நடித்தாகவும் படப்பிடுப்பு தள சுவாரஸ்யங்களை பகிர்ந்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் தவிர கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதாகவும் பட்டியலிட்டார்.  இடையில் சின்ன தொய்வு இருந்ததாகவும்,  தற்போது அதிக திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருப்பதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சரத்குமார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Sarathkumar