முகப்பு /செய்தி /entertainment / "அன்பு நண்பர்... மிகச்சிறந்த மனிதர் மயில்சாமி"... நடிகர் சரத்குமார் இரங்கல்

"அன்பு நண்பர்... மிகச்சிறந்த மனிதர் மயில்சாமி"... நடிகர் சரத்குமார் இரங்கல்

நடிகர் சரத்குமார் இரங்கல்

நடிகர் சரத்குமார் இரங்கல்

Actor Mayilsamy Passes Away | நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு திரைதுறையின் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நகைச்சுவை நடிகர் மயில்சாமி  உடல்நலக்குறைவால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிர சிவ பக்தரான 57 வயதான நடிகர் மயில்சாமி, சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மயில்சாமியின் மறைவுக்கு சக நடிகர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மயில்சாமியின் மறைவுக்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சரத்குமார்,  “எனது அன்பு நண்பரும், மிகச்சிறந்த மனிதரும், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமும், சிறந்த விரிவுரையாளருமான மயில்சாமி திடீர் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி பேரதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

மேலும் அன்பு நண்பர் மயில்சாமி அவர்களை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Actor sarath kumar, Mayilsamy