Radhika Sarathkumar: ”குறை சொல்ல முடியாத நடிகை” 43 ஆண்டுகளை கடந்த ராதிகாவுக்கு சரத்குமார் வாழ்த்து!

ராதிகா சரத்குமார்

இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  • Share this:
    திரைத்துறையில் நுழைந்து 43 ஆண்டுகள் ஆனதையடுத்து நடிகை ராதிகாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமார்.

    கடந்த 1978-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. இந்தப் படத்தை இயக்குநர் பாரதிராஜா இயக்கியிருந்தார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதோடு சின்னத்திரையில் கால் பதித்து, நடிப்பு, தயாரிப்பு என பலருக்கும் உதாரணமாக திகழ்கிறார்.

    ராதிகா நடிக்கும் சீரியல் என்றாலே ரசிகர்களிடம் ஒருவித எதிர்பார்ப்பு உருவாகும். அந்தளவுக்கு தனக்கான சாம்ராஜ்யத்தை திறம்பட உருவாக்கியுள்ளார். இந்நிலையில் அவர் நடிப்பு துறைக்குள் வந்து 43 ஆண்டுகள் ஆனதையடுத்து, அவருக்கு நடிகரும் ராதிகாவின் கணவருமான சரத்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “என்னுடைய அன்பு மனைவி மற்றும் சிறந்த தோழிக்கு, சினிமா துறையில் 43 ஆண்டுகள் புகழுடன் இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக மட்டும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. குறை சொல்ல முடியாத நடிகையாகவும், தொழில்முனைவோராகவும் முத்திரை பதித்துள்ளீர்கள். இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ராதிகா” எனத் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: