பா.ரஞ்சித் படத்தில் ஆர்யாவுடன் மோதும் மற்றொரு ஹீரோ!

பா.ரஞ்சித் படத்தில் ஆர்யாவுடன் மோதும் மற்றொரு ஹீரோ!
ஆர்யா 30-வது படம்
  • Share this:
பா.ரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் அவருடன் நடிகர் சந்தோஷ் பிரதாப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் காப்பான். அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘டெடி’படத்தில் நடித்து முடித்திருக்கும் ஆர்யா தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படம் ஆர்யா நடிக்கும் 30-வது படம்.

1970-காலகட்டத்தில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு சல்பேட்டா என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாராவும், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். கே.ஜி.எப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திரா ராஜு இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகி வருகின்றன.


இந்தப் படத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித் முறையாக குத்துச் சண்டை கற்று பின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். நடிகர் ஆர்யா இந்தப் படத்துக்காக தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளார்.

ஆர்யாவைப் போன்றே நடிகர் சந்தோஷ் பிரதாப்பும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை குத்துச் சண்டை வீரர் போல் மாற்றி வருகிறார். அதை வீடியோவாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ஆர்யா, சந்தோஷ் பிரதாப்பை வாழ்த்தியிருப்பதோடு, வளையத்திற்குள் சந்திப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். எனவே நடிகர் சந்தோஷ் பிரதாப் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.


இவர் ஏற்கெனவே பார்த்திபன் இயக்கத்தில் வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நாயகனாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஜிப்ஸி, வெல்வெட் நகரம்... நாளை வெளியாகும் படங்களின் பட்டியல்..!

 
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading