முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாட்டர்டே இஸ் கம்மிங்கு... கிக் படத்தில் பாடகரான சந்தானம்!

சாட்டர்டே இஸ் கம்மிங்கு... கிக் படத்தில் பாடகரான சந்தானம்!

சந்தானம்

சந்தானம்

சந்தானம் முதல் முறையாக பாடியிருக்கும் சாட்டர்டே இஸ் கம்மிங்கு பாடல் வெளியானது. 

  • Last Updated :
  • Tamil Nadu, India

கிக் என்ற படத்தில் நடிகர் சந்தானம் முதல் முறையாக பாடியுள்ள பாடல் வெளியாகியுள்ளது. 

நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்த நடிகர் சந்தானம், தற்போது கிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்குகிறார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கிக் திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு  அர்ஜுன் ஜான்யா என்பவர் இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள, Saturday is Cominguu என்ற பாடலை நடிகர் சந்தானம் பாடியுள்ளார்.

இதுவரை சந்தானம் எந்த திரைப்படத்திலும் தன்னுடைய சொந்த குரலில் பாடல் பாடியது கிடையாது. முதன் முறையாக கிக் திரைப்படத்தில் அர்ஜுன் ஜான்யா இசையமைப்பில் Saturday is Cominguu என்ற பாடலை பாடியுள்ளார்.

Also read... 'சூப்பர்.. எக்ஸலண்ட்..' 'தனி ஒருவன்' இயக்குனரை பாராட்டித் தள்ளிய ரஜினி.! தெலுங்கால் கிடைத்த பெருமை!

இந்த பாடல் தற்போது youtube இல் வெளியிடப்பட்டிருக்கிறது. சந்தானம் முதல் முறையாக பாடகர் அவதாரம் எடுத்திருக்கும் இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவரும் என படக் குழுவினர் எதிர்பார்த்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Santhanam