சந்தானத்தின் அடுத்த பட ஷூட்டிங் துவங்கியது!

சந்தானத்தின் அடுத்த பட ஷூட்டிங் துவங்கியது!
நடிகர் சந்தானம்
  • Share this:
‘A1’ பட இயக்குநர் - சந்தானம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ஷூட்டிங் துவங்கியது.

கடந்த வருடம் சந்தானம் நடிப்பில் ஜான்சன்.கே இயக்கத்தில் வெளியான ‘A1’ திரைப்படம் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. இந்நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சந்தானம் தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தானந்துக்கு ஜோடியாக அனைகா நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘காவிய தலைவன்’, ‘செம போத ஆகாதே’, ‘கீ’ போன்ற படங்களில் நடித்தவர்.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கிய நிலையில் கொரோனா அச்சத்தின் காரணமாக வரும் 31-ம் தேதி வரை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க: கொரோனா தாக்கம் : சினிமா, சீரியல் ஷூட்டிங் ரத்து - ஆர்.கே.செல்வமணி
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading