ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘நல்ல படம் ஓடும்’ – வாரிசு வெளியீட்டு பிரச்னை குறித்து நடிகர் சந்தானம் பரபரப்பு கருத்து…

‘நல்ல படம் ஓடும்’ – வாரிசு வெளியீட்டு பிரச்னை குறித்து நடிகர் சந்தானம் பரபரப்பு கருத்து…

விஜய் - சந்தானம்

விஜய் - சந்தானம்

அடுத்து சீரியஸான படங்களை தவிர்த்துவிட்டு, தன்னுடைய ஃபார்முலாவில் நான்கு படங்கள் நடிக்க உள்ளதாக சந்தானம் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கு பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து நடிகர் சந்தானம் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த ஏஜென்ட் சீனிவாச ஆத்ரேயா என்ற திரைப்படத்தை தமிழில் ஏஜென்ட் கண்ணாயிரம் என ரீமிக்ஸ் செய்துள்ளனர்.  சந்தானம் நடித்துள்ள அந்த திரைப்படத்தை மனோஜ் பீதா என்பவர் தயாரித்து, இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் சந்தானம், நடிகை ரியா சுமன், இயக்குனர் மனோஜ் பீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இயக்குனர், இந்த திரைப்படத்தில் சந்தானம் நகைச்சுவை ஃபார்முலாவை சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக கூறினார்.  மேலும் தனக்கு என்ன வேண்டுமோ அதை விடாப்படியாக இருந்து சாதித்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

துணிவு படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யும் ‘லைகா’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதேபோல் தெலுங்கில் இருந்ததைவிட இங்கே சில மாற்றங்கள் செய்து ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தை எடுத்திருப்பதாகவும்,  அது நிச்சயம் வித்தியாசமாக இருக்கும் எனவும் மனோஜ் பீதா குறிப்பிட்டார். அவரை தொடர்ந்து பேசிய நடிகர் சந்தானம், இந்த திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகளில் கவுன்டர் (Counter) வசனங்களை சேர்க்க தான் முயற்சித்ததாகவும், ஆனால் அதற்கு இயக்குனர் ஒத்துக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

அதேசமயம் இந்த கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருப்பதாகவும் பேசினார். அதேபோல் சீரியசான திரைப்படங்களில் கொஞ்சம் தவிர்த்துவிட்டு, அடுத்து சீரியஸான படங்களை தவிர்த்துவிட்டு,  தன்னுடைய ஃபார்முலாவில் நான்கு படங்கள்  நடிக்க உள்ளதாக கூறினார்.  அதன் பிறகு மீண்டும் சீரியசான படங்களில் நடிப்பேன் எனவும் தெரிவித்தார்.

அவரிடம் நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில், தெலுங்கு திரையுலகில் நேரடி படங்களுக்கு மட்டுமே பண்டிகை நாட்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் முடிவு பற்றிய உங்கள் பார்வை என்ன என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சந்தானம், தமிழ் படங்கள் வெளியாகும் போது, இங்கு நம் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். அதுபோலதான் அந்தந்த மொழி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எந்த படம் நன்றாக இருக்கிறதோ அந்த படம் ஓடும் என தெரிவித்தார்.

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட ‘வெந்து தணிந்தது காடு’ சண்டைக்காட்சி – மேக்கிங் வீடியோ வெளியானது…

பண்டிகை நாட்களில் தெலுங்கில் நேரடியாக உருவாகும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது. இதனால், ஆந்திரா,தெலங்கானாவில் அதிக தியேட்டர்களில் விஜய்யின் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடுவை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Actor Santhanam, Actor Vijay