முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரபல கோவிலில் மகனுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சந்தானம்

பிரபல கோவிலில் மகனுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் சாமி தரிசனம்

நடிகர் சந்தானம் சாமி தரிசனம்

Actor Santhanam | புதுச்சேரியில் புகழ்பெற்ற குரு சித்தானந்தர் கோயிலில்  நடிகர் சந்தானம் தனது மகன் உடன் சாமி தரிசனம் செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி வந்த நடிகர் சந்தானம், கிழக்கு கடற்கரை சாலை-கருவடிக்குப்பம் சந்திப்பில் அமைந்துள்ள  ஸ்ரீமத் குரு சித்தானந்தர் கோயிலுக்கு  வருகை தநத்ர, அவரது  ரசிகர் மன்றத்தினர் சந்தானத்தை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு கோயில் குருக்கள் சந்தானத்திற்கு சிறப்பு பூஜைகள்  செய்தார். சந்தானத்துடன் அவரது மகனும் கோயிலுக்கு வந்து வழிப்பட்டார்.

கோயில் சிறப்புகள் குறித்து கேட்ட சந்தானம் அடிக்கடி வருவதாக   உறுதி அளித்தார். சித்தானந்தர் என்ற  சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளார். அவரது சமாதி மீது சிவலிங்கம் வைத்து வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கோயிலுக்கு அருகில் தான் பாரதியாரின் குயில் தோப்பு இருந்தது.புதுச்சேரியில் பாரதியார் தங்கி இருந்த போது குயில் தோப்பிற்கு வந்து தான் கவிதைகளை எழுதுவார்.

Also Read : சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கர் மகள் அதிதி!

தோப்பிற்கு வரும்தெல்லாம் மகாகவி  கோயிலுக்கு வந்து  வழிபடுவார்.  இதன் நினைவாக பாரதியாருக்கு கோயில் வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பலர் பாரதியார் சிலை முன்பு நின்று வழிபடுவதுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில் நடிகர் சந்தானமும் பாரதியார் சிலையை வழிபட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்பொழுது குயில்தோப்பு இல்லையென்றாலும் மகாகவி பாரதியார் சிலையை  பார்த்து பலரும் ஆறுதல் அடைகிறார்கள்.

First published:

Tags: Actor Santhanam