முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கலவை விமர்சனங்களைப் பெறும் சந்தானத்தின் குலுகுலு…

கலவை விமர்சனங்களைப் பெறும் சந்தானத்தின் குலுகுலு…

சந்தானம்

சந்தானம்

வழக்கமாக பார்க்கும் சந்தானம் குலுகுலு படத்தில் மிஸ் ஆகிறார். படத்தின் நீளம், பலவீனமான திரைக்கதை, அழுத்தமாக சொல்லப்படாத காட்சிகள் படத்தின் மைனஸாக பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சந்தானம் – இயக்குனர் ரத்ன குமார் காம்போவில் வெளிவந்துள்ள குலுகுலு திரைப்படம் சமூக வலைதளங்களில் கலவை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த வாரம் தி லெஜெண்ட், ஜோதி, விக்ராந்த் ரோனா மற்றும் குலுகுலு ஆகிய படங்கள் ரிலீசாகியுள்ளன. இதில் வியாழன் அன்று வெளியான தி லெஜெண்ட் மற்றும் விக்ராந்த் ரோனா ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், சினிமா ரசிகர்களின் பார்வை சந்தானத்தின் குலுகுலு பக்கம் திரும்பியது.

முன்னெப்போதும் இல்லாத சற்று சீரியஸான கேரக்டரில் சந்தானம் இந்த படத்தில் நடித்துள்ளார்.

அவரைச் சுற்றிலும் காமெடி கேங் காணப்படும் நிலையில், சூது கவ்வும் பட சாயலில் வித்தியாசமான முயற்சியை குலுகுலு படத்தில் மேற்கொண்டுள்ளார் இயக்குனர் ரத்னகுமார்.

தமிழ்நாட்டில் ப்ரியா பவானி சங்கருக்கு பிடித்த ஊர் இதுதான்…

ஆனால் படக்குழுவினர் ரசிகர்களிடம் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிக்கிலோனா, பிஸ்கோத், சபாபதி படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனை குலுகுலு திரைப்படம் சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இயக்குனர் ரத்னகுமார் ஆடை, மேயாதமான் படங்களை இயக்கினார் என்பதாலும், மாஸ்டர், விக்ரம் படத்திற்கு வசனகர்த்தா என்பதாலும் குலுகுலு திரைப்படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் சந்தானத்தின் ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் படம் பார்த்தவர்கள் குலுகுலுவுக்கு கலவை விமர்சனங்களையே அளித்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆகஸ்ட் 12-ல் விஷாலின் லத்தியுடன் மோதும் கார்த்தியின் விருமன்…

வழக்கமாக பார்க்கும் சந்தானம் குலுகுலு படத்தில் மிஸ் ஆகிறார். படத்தின் நீளம், பலவீனமான திரைக்கதை, அழுத்தமாக சொல்லப்படாத காட்சிகள் படத்தின் மைனஸாக பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் வெளியான படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த வாரம் பொய்க்கால் குதிரை, லாஸ்ட் 6 ஹவர்ஸ், எண்ணி துணிக, குருதி ஆட்டம் படங்கள் வெளியாகவுள்ளன.

First published:

Tags: Actor Santhanam