அதிர்ச்சி... மன அழுத்தம்...! நடிகர் சேதுராமன் மறைவுக்கு சந்தானம் இரங்கல்

அதிர்ச்சி... மன அழுத்தம்...! நடிகர் சேதுராமன் மறைவுக்கு சந்தானம் இரங்கல்
  • News18
  • Last Updated: March 27, 2020, 8:53 AM IST
  • Share this:
தனது 36 வயதில் திடீரென மரணம் அடைந்த நடிகர் சேதுராமனின் மறைவுக்கு, நடிகர் சந்தானம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிப்பில், கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படம் 2013-ம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்.

தோல் மருத்துவரான இவர், கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்திற்குப் பின்னர்  தமிழில் வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.


சென்னையில் பணியாற்றி வந்த இவர், மாரடைப்பின் காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு உமா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. ஒரு குழந்தையும் உள்ளது.

36 வயதில் சேதுராமன் உயிரிழந்தது திரைத்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் சேதுராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

என் உயிர் நண்பன் சேதுவின் மரணத்தால் தான் அதிர்ச்சியில் உறைந்திருப்பாதகவும், அவருடைய ஆன்மா நிம்மதியடைய பிரார்த்திப்பதாகவும் நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார்.


நடிகர் சதிஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் சேதுராமனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்