கலகலப்பான காமெடியில் கலக்கும் சந்தானம் - 'A1' டீசர் ரிலீஸ்

news18
Updated: April 14, 2019, 7:08 PM IST
கலகலப்பான காமெடியில் கலக்கும் சந்தானம் - 'A1' டீசர் ரிலீஸ்
நடிகர் சந்தானம்
news18
Updated: April 14, 2019, 7:08 PM IST
சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா நடிக்கிறார். இவர் '100% லவ்' என்ற தெலுங்கு படம் மற்றும் பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது. தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசரில் வழக்கம்போல கலகலப்பான காமெடி வசனங்கள் இடம்பெற்றுள்ளன.தளபதி 63: கேப்டனாக நடிக்கும் இந்துஜாவின் அட்டகாசமான புகைப்படங்கள்!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...