டைமிங் ரைமிங் காமெடிகளால் தமிழ்சினிமாவில் சிரிப்பின் நம்பிக்கை நட்சத்திரமாய் உயர்ந்தவர் சந்தானம். அவரின் பிறந்தநாளான இன்று அவரைப்பற்றிய தொகுப்பை குட்டி ஸ்டோரியில் தற்போது பார்க்கலாம்.
’காதல் அழிவதில்லை’ ’ ‘அலை’ திரைப்படங்களில் சிறு வேடங்களில் முகம் பதித்த சந்தானத்தை முழு காமெடி நடிகனாக அறிமுகப்படுத்தியது ‘மன்மதன்’ திரைப்படம். கவுண்டமணியின் கவுண்டர் டயலாக் போல் சந்தானத்தின் காமெடி காட்சிகள் இருந்ததென ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டாலும், அந்த கவுண்டர் டைமிங் ரைமிங் காமெடிகள்தான் தமிழகத்தின் இளம் ரசிகர்களிடம் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.
2007ஆம் வருடங்களில் தமிழ் திரை ரசிகர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் என இரு பிரிவுகளாக பிரிந்து கத்தி சண்டை நிகழ்த்தி கொண்டிருந்த போது, அஜித்துடன் முதன் முதலில் காமெடி நண்பராக ‘கிரீடம்’ திரைப்படத்தில் நகைச்சுவை விருந்து படைத்து அதே ஆண்டு விஜயுடன் ‘அழகிய தமிழ் மகன் ‘ திரைப்படத்திலும் நடித்து, தளபதி விஜயின் ரசிகர்களையும் தன் கலாய் காமெடியால் சிரிக்க வைத்து விசில் அடிக்க வைத்தார் இந்த கலாய் மன்னன் சந்தானம்,
தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகர்களான அஜித், விஜய், தனுஷ், சிம்பு, ஆர்யா, மாதவன் என அனைத்து கதாநாயகர்களுடனும் முதன்மை காமெடியனாக நடித்து தமிழ் சினிமாவின் நகைச்சுவை வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்த சந்தானம்.
இதையும் படிங்க :
சிக்கியது ஆதாரம்.. தமிழ் - சரஸ்வதி கல்யாணம் நடக்க வாய்ப்பு இல்லை!
ஏ…. பீ…. சி என அனைத்து சென்டர் ரசிகர்களையும் தன் காமெடி பிஸ்கெட்டால் மயக்கினார். குறிப்பாக ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் தனுஷின் நண்பராக வரும் சந்தானம் கோக்கு மாக்கான வார்த்தைகளை சொல்லி தனுஷிடம் குத்து பட்டாலும் காெடியில் தான் ஒரு பொல்லாதவன் என நிரூபித்தார்.
கவுண்டர் டயலாக்குகளில் கவுண்டமணியையே கொஞ்சம் மிஞ்சித்தான் போனார் சந்தானம் என்று சொல்லும் அளவு இவரது காமடி வசனங்களில் ரசிகர்கள் சிரித்து முடிப்பதற்குள் அடுத்த கவுண்டர் காமடியை முடிப்பது சந்தானத்தின் ஸ்பெஷல்..
எஸ்.எம்.எஸ் திரைப்படத்தில் ஜீவாவுடன் சேர்ந்து காமடி கதகளி ஆடிய சந்தானம். எம். ராஜேஷின் மற்றொரு திரைப்படமான ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தில் நல்ல தம்பி என்னும் கதாபாத்திரத்தில் ஆர்யாவோடு இணைந்தும், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ யில் உதயநிதியோடு இணைந்தும் காமடி கலாட்சேபம் செய்திருந்தார்.
இதையும் படிங்க :
5 மொழிகளில் வெளியாகும் விஜய் சேதுபதியின் படத்தில் இணைந்த வரலட்சுமி
சிம்புவுடன் ‘வானம்’ ’ஒஸ்தி’ விக்ரமுடன் ‘தெய்வ திருமகள்’, விஜயுடம் ‘வேலாயுதம்’ மற்றும் ’கலகலப்பு’ ’சகுனி’ ’அலக்ஸ்பாண்டியன்’ ’சேட்டை’ ’சிங்கம் 2’ ’தலைவா’ ’பட்டத்து யானை’ என கலந்தடித்து காமடியில் கலக்கிய சந்தானம் சிறுத்தையில் கதாநாயகன் கார்த்தியுடன் சேர்ந்து காட்டு பூச்சி என்னும் கதாபாத்திரத்தில் செய்யும் அலப்பறைகளால் அரங்கமே அதிர்ந்தது.
2014 ஆம் ஆண்டு ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக பதவி உயர்வு பெற்றார் சந்தானம். தொடர்ந்து ’இனிமே இப்படித்தான்’… தில்லுக்கு துட்டு பார்ட் 1 பார்ட் 2’… A1 .. டகால்டி.. பிஸ்கோத்… சபாபதி.. பாரிஸ் ஜெயராஜ்.. டிக்கிலோனா போன்ற திரைப்படங்களில் கதானாயகனாக நடித்து கதாநாயகர்களின் வரிசையிலும் தனக்கு சீட் போட்டார். எந்த வித சினிமா பின் புலமும் இல்லாமல் இன்று வரை திரையில் காமடி ராஜ்ஜியம் நடத்தி கொண்டிருக்கும் சந்தானத்தை "காமடியில் ஏ1" என்று எப்போதும் சொல்லும் தமிழ் சினிமா.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.