தன் கையில் குழந்தையின் கியூட்டான கையை வைத்து அதைப்புகைப்படமாக எடுத்து சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் சஞ்சீவ்.
தமிழ் சினிமாவில் குளிர் 100 டிகிரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சீவ் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றார். இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக ஆல்யா மானஷா நடித்திருந்தார். இதையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தற்போது தனது பெண் குழந்தையின் முகத்தை வெளி உலகுக்குக் காட்டாமல் குழந்தையின் கையை தன் கை மீது வைத்து கியூட்டான புகைப்படத்தை எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சஞ்சீவ். மேலும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் சஞ்சீவ் தனது பதிவில் கூறியுள்ளார். அவரது இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.