முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘தலைக்கூத்தல் படத்தை முடித்து விட்டு ஒருவாரம் ஆன பின்னரும் மீண்டுவர முடியவில்லை’ – சமுத்திரக்கனி நெகிழ்ச்சி

‘தலைக்கூத்தல் படத்தை முடித்து விட்டு ஒருவாரம் ஆன பின்னரும் மீண்டுவர முடியவில்லை’ – சமுத்திரக்கனி நெகிழ்ச்சி

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

எனக்கு அப்பா கிடையாது. 15 வயதில் அவர்கள் உயிர் இழந்து விட்டார்கள். அந்த ஏக்கத்தில் எடுத்தது தான் அப்பா என்ற படம். – சமுத்திரக்கனி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தலைக்கூத்தல் படத்தை முடித்து விட்டு ஒரு வாரம் ஆன பின்னரும் தன்னால் படத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை என்று நடிகர் சமுத்திரக்கனி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளர். இந்த படத்தை லென்ஸ் படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி, கதிர், கலை, வசுந்தரா, கத நந்தி உள்ளிட்டோர் நடித்துள்னர். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பாக சசிகாந்த் தயாரித்திருக்கிறார்.

தலைக்கூத்தல் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் சமுத்திரக்கனி பேசியதாவது- இந்த திரைப்படம் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. படத்தை முடித்து ஒரு வாரம் ஆன பின்னரும், அந்த படத்தில் இருந்து என்னால் மீண்டு வர முடியவில்லை. எனக்கு அப்பா கிடையாது. 15 வயதில் அவர்கள் உயிர் இழந்து விட்டார்கள். அந்த ஏக்கத்தில் எடுத்தது தான் அப்பா என்ற படம். அதையெல்லாம் உடைத்து எறிவது போல் ஒரு கதை இந்த தலைக்கூத்தல் படத்தில் இருக்கிறது.

இதற்காக சசி சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை சந்திக்கும் போது, தனக்கு பிடித்த படம்  ஆண்டுக்கு 10 தான் வருகிறது. அதில் ஒரு கதைதான் என்னை தேடி வருகிறது. அதை நான் சரியாக செய்ய வேண்டும் என்று கூறினார். உண்மையிலேயே சசி சார் மிகச் சிறப்பாக இந்த படத்தை செய்துள்ளார். நான் இருக்கும் வரை அவருடன் பயணப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: Samuthirakani