முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித் - எச்.வினோத் படத்தில் இடம்பெற்ற சமுத்திரக்கனி... ரசிகர்களுக்கு பிடித்தமான கதை என பாராட்டு

அஜித் - எச்.வினோத் படத்தில் இடம்பெற்ற சமுத்திரக்கனி... ரசிகர்களுக்கு பிடித்தமான கதை என பாராட்டு

நடிகர் சமுத்திரக்கனி

நடிகர் சமுத்திரக்கனி

எச்.வினோத் உடனான படத்தை தொடர்ந்து தனது 62 வது படத்தை அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது

  • Last Updated :

ஏகே 61 படத்தில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ள சமுத்திரக்கனி, இந்த படத்தின் கதை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

எச்.வினோத், அஜித், போனிகபூர் கூட்டணியில் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதில் வலிமை படம் சற்று கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் நீளம் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் வலிமையின் வேகத்தை குறைத்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதே டீம் மீண்டும் ஏகே 61 படத்தில் இணைந்துள்ளது. படத்தில் அஜித் 2 வேடங்களில் நடிக்கிறார். வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை மவுன்ட் ரோடைப் போன்ற பிரமாண்ட செட் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அஜித்துக்கு ஜோடியாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவரும், அசுரன் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய மஞ்சு வாரியர் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படிங்க - ‘அரபிக்குத்து பாடலை அனிருத் தான் எழுத சொன்னார்’ – சிவகார்த்திகேயன் பேட்டி

இந்நிலையில் இந்திய சினிமாவில் படு பிஸியாக இருக்கும் சமுத்திரக்கனி ஏகே 61 படத்தில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் இடம்பெற்றுள்ளேன். இந்த படத்தின் ஸ்க்ரிப்ட் மிகச்சிறப்பாக உள்ளது. இது ரசிகர்களை அதிகம் கவரும். ஏகே 61 படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - ரசிகர்களின் வரவேற்பை பெறும் கே.ஜி.எஃப் 2 மேக்கிங் வீடியோ!!

வலிமை படத்தில் க்ளீன் ஷேப் கெட் அப்பில் வந்த அஜித், ஏகே 61 படத்தில் நீண்ட தாடியுடன் இடம் பெறுகிறார். சமீபத்தில் இந்த கெட்அப்புடன் வெளிவந்த அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகின.

top videos

    எச்.வினோத் உடனான படத்தை தொடர்ந்து தனது 62 வது படத்தை அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது

    First published:

    Tags: Actor Ajith, Samuthirakani