முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித்தின் ஏ.கே. 61 பட ஷூட்டிங்கில் இணைந்த சமுத்திரக்கனி…

அஜித்தின் ஏ.கே. 61 பட ஷூட்டிங்கில் இணைந்த சமுத்திரக்கனி…

நடிகர் சமுத்திரக்கனி

நடிகர் சமுத்திரக்கனி

AK 61 Update : வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Last Updated :

அஜித் நடித்து வரும் ஏ.கே. 61 படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றன நிலையில், மீண்டும் அதே கூட்டணி ஏகே 61 படத்தில் இணைந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து ஏ.கே.61  திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித்துடன் மஞ்சுவாரியர் படத்தில் இடம் பெற்றுள்ளார்.

இன்று மாலை வெளியாகிறது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர்! 

ஏகே 61  படத்தில், அஜித் இரண்டு கேரக்டர்களில் தோன்றுவார் என்று பரவலாக பேசப்படுகிறது. இதில், பெரிய அளவில் மேக்கப் ஏதுமின்றி ஸ்டைலிஷான லுக்கில், அஜித் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

படப்பிடிப்புத் தளத்தில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்து அஜித் ஏ.கே.61 படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.  இந்நிலையில் தற்போது ஐரோப்பாவில் சுற்றுப் பயணத்தில்இருக்கும் அஜித் விரைவில் படப்பிடிப்பு தளத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அஜித் இடம்பெறாத காட்சிகளை இயக்குனர் வினோத் படமாக்கி வருகிறார். அந்த வகையில் நடிகர் சமுத்திரக்கனி ஏ.கே. 61 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

முதலில் ஏ.கே. 61 படத்தை தீபாவளியையொட்டி திரைக்கு கொண்டு வரலாம் என்று படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது வெளியீட்டு தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி மாற்றப்பட்டிருக்கிறது.

விஜய் மனைவி சங்கீதா விஜய்யின் தங்கையைப் பார்த்திருக்கிறீர்களா? ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்களே! 

வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதியன்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், படக்குழுவினர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தனர்.

First published:

Tags: Actor Ajith, Samuthirakani