சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தை பாராட்டிய சமுத்திரக்கனி

”முன்னர் இருந்த ஹீரோக்கள் எல்லாம் தற்போதும் கூட ஹீரோவாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உடன் நடித்த நடிகைகள் ஆணாதிக்கம் காரணமாக ஒதுக்கப்படுகிறார்கள்” என நடிகை சங்கவி தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 22, 2019, 8:05 PM IST
சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தை பாராட்டிய சமுத்திரக்கனி
நடிகர் சமுத்திரக்கனி - நடிகர் சூர்யா
Web Desk | news18
Updated: July 22, 2019, 8:05 PM IST
”கல்வி கொள்கையை பற்றி பேச சூர்யாவிற்கு தகுதியில்லை என்றால், வேற யாருக்கும் தகுதியே இல்லை என்பது தான் உண்மை” என்று நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

கொளஞ்சி திரைப்படக் குழுவினரின் சந்திப்பின் போது பேசிய சமுத்திரக்கனி, “சூர்யாவிற்கு கல்வி கொள்கையை பற்றி பேச தகுதியில்லை என்றால் வேற யாருக்கும் தகுதியே இல்லை என்பது தான் உண்மை.
யார் பேசினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை இவர் இவர் தான் பேச வேண்டும் என்று நீங்களே கூறுங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

வருடங்கள் மாறுகிறது, போராடுகிறவர்கள் மாறுகிறார்கள், ஆனால் நாட்டில் இருக்கும் பிரச்னை அப்படியே தான் இருக்கிறது. நம் தலைமுறையில் மாற்றம் வந்துவிடுமா..? என்றால் அது கண்டிப்பாக நடக்காது” என சமுத்திரக்கனி கூறியுள்ளார்.Loading...

இதனிடையே பேசிய நடிகை சங்கவி, ”முன்னர் இருந்த ஹீரோக்கள் எல்லாம் தற்போதும் கூட ஹீரோவாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உடன் நடித்த நடிகைகள் ஆணாதிக்கம் காரணமாக ஒதுக்கப்படுகிறார்கள்” என கூறினார்.

Also Watch: குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய Good touch, Bad touch...

First published: July 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...