Home /News /entertainment /

வில்லனாக மாறிய இயக்குநர் பி.வாசுவின் மகன்...!

வில்லனாக மாறிய இயக்குநர் பி.வாசுவின் மகன்...!

சக்தி

சக்தி

திரைத்துறையில் ஒருவர் பிரபலமாக இருக்கிறார் என்பதாலேயே அவரது வாரிசுகளால் வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்று சொல்ல முடியாது. அதற்கு உதாரணமாக இருப்பவர் சக்தி. பிரபல இயக்குநர் பி. வாசுவின் மகன். நடிகன், சின்ன தம்பி, ரிக்சாமாமா, செந்தமிழ் பாட்டு போன்ற பி. வாசுவின் பல படங்களில் அவரது மகன் சக்தி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
பிரபல இயக்குநர் பி .வாசுவின் மகன் சக்தி டைகர் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

திரைத்துறையில் ஒருவர் பிரபலமாக இருக்கிறார் என்பதாலேயே அவரது வாரிசுகளால் வெற்றிக் கொடி நாட்ட முடியும் என்று சொல்ல முடியாது. அதற்கு உதாரணமாக இருப்பவர் சக்தி. பிரபல இயக்குநர் பி. வாசுவின் மகன். நடிகன், சின்ன தம்பி, ரிக்சாமாமா, செந்தமிழ் பாட்டு போன்ற பி. வாசுவின் பல படங்களில் அவரது மகன் சக்தி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

2007-இல் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நாயகனாக நடித்தார். பி.வாசுவின் படங்கள் தமிழக மக்களின் மனதில் பதிந்த அளவுக்கு அவரது மகனின் முகம் பதியவில்லை. கடைசியாக பி.வாசு இயக்கிய கன்னட படம் சிவலிங்கா வில் நடித்தார் .2017 இல் இந்தப் படம் வெளியானது. அதே வருடம் 7 நாட்கள் திரைப்படத்திலும் சக்தி நடித்தார். இந்தப்படமும் அவரது முந்தைய படங்கள் போன்று எவ்வித தாக்கத்தையும் பாக்ஸ் ஆபிஸில் ஏற்படுத்தவில்லை.

அதன்பிறகு திரைப்படங்களிலிருந்து ஒதுங்கி இருந்தவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் கமல் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சி வாயிலாக பிரபலமானவர்கள் ஏராளம். ஆனால் பிரபலமாக இருந்த சக்திக்கு பிக்பாஸ் எவ்வித உயர்வையும் அளிக்கவில்லை. திரைப்பட வாய்ப்புகளும் தேடி வரவில்லை.

Also read... சினிமாவுக்கு வரும் சூப்பர் ஹீரோ தோனி...?
இந்நிலையில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் டைகர் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சக்தி. இயக்குனர் முத்தையாவின் திரைக்கதை, வசனத்தில் தயாராகும் இந்தப் படத்தை கார்த்தி என்பவர் இயக்குகிறார். இது கன்னட படம் ஒன்றின் தமிழ் தழுவல் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும் ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடிக்கின்றனர். இன்னொரு கதாநாயகியாக அனந்திகா நடிக்கிறார். நாயகன் வேடம் கைகொடுக்காத நிலையில் வில்லன் வேடமாவது சக்திக்கு துணை செய்யுமா என்பதை டைகர் படம்தான் முடிவு செய்யும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி