ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கினார்..

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கினார்..

சாய் தரம் தேஜ்

சாய் தரம் தேஜ்

நடிகர் சாய் தரம் தேஜ் நலமுடன் இருப்பதாக அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தெலுங்கு திரையுலகின் இளம்நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சாய் தரம் தேஜ். இவர் நடிகர் சீரஞ்சீவியின் சகோதரி மகன் ஆவார். தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம்நடிகரான சாய் தரம் தேஜ், ரே, சுப்பிரமணியம் பார் சேல், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஹைதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் நடிகர் சாய்-க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  சாய்தரம் தேஜின் வலது கண் மற்றும் மார்பில் பலத்த காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஹெல்மெட் இருந்தபோதிலும், சாய்தரம் தேஜ் விபத்தின் தீவிரம் காரணமாக பலத்த காயமடைந்ததாக தெரிகிறது. 108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் சாய் தரம் தேஜ், சிரஞ்சீவி குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  பைக்கில் அதிவேகமாக சென்றதாக விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான காட்சிகளும் வெளியாகியுள்ளது.

  ' isDesktop="true" id="557257" youtubeid="7l64PhPpioM" category="cinema">

  தெலுங்கு தயாரிப்பாளரும், சாய் தரம் தேஜ் மாமாவுமான அல்லு அரவிந்த் பேசுகையில், “ சாய் இரவு 7.30 மணிக்கு சாலை விபத்தில் சிக்கினார். அவர் இப்போது நலமாக உள்ளார். மருத்துவர்களிடம் பேசினேன். அவருக்கு தலை , முதுக்கெலும்புகளில் காயம் ஏதும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். என்றார்.

  சாய் ஓட்டிச்சென்ற பைக்

  தேஜ் விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்து நடிகர் பவன் கல்யாண், சிரஞ்சீவி உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Accident, Cinema